காளான் மிளகு வறுவல் செய்வதின் செயல்முறை

Last Updated : Aug 14, 2017, 02:41 PM IST
காளான் மிளகு வறுவல் செய்வதின் செயல்முறை title=

காளான் உடலுக்கு முகவும் இன்றியமையாதது. அது எப்படி செய்வது என்று பார்ப்போம்:

 

தேவையான பொருட்கள் :-
  
காளான் - 250 கிராம் 
சின்ன வெங்காயம் - 50 கிராம் 
தக்காளி - 1 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் 
மிளகு தூள்- 1 1/2 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 

தாளிப்பதற்கு :-

கடுகு - 1/2 டீஸ்பூன், 
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன், 
சீரகம் - 1/2 டீஸ்பூன், 
கறிவேப்பிலை - சிறிது, 
எண்ணெய் - தேவையான அளவு. 

செய்முறைகள் :- 

* முதலில் காளானை பொடியாக நறுக்கி, சுடுநீரில் போட்டு ஒருமுறை அலசிக் கொள்ள வேண்டும். 

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும். 

* பின்பு அதில் வெங்காயத் போட்டு வதக்கிய பின்னர், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.

* இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். 

* பிறகு அதில் மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கி, காளான் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி, மசாலா அனைத்தும் காளானுடன் ஒன்று சேர வாணலியை மூடி, 10 நிமிடம் வேக வைத்து இறக்கினால், காளான் மிளகு வறுவல் ரெடி!!!

Trending News