உங்கள் குழந்தை உயரமா வளரணுமா? ‘இந்த’ உணவுகளை கொடுத்து பாருங்கள்..

பெற்றோர்கள் பலருக்கு, அவர்களின் குழந்தைகள் உயரமாக வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். குழந்தைகளை இயற்கையாகவே உயரமாக்குவது எப்படி? இங்கு பார்ப்போம்.   

Written by - Yuvashree | Last Updated : May 27, 2024, 05:22 PM IST
  • குழந்தைகளை உயரமாக வளர்க்க டிப்ஸ்
  • என்னென்ன உணவுகளை தர வேண்டும்?
  • பெற்றோர்கலுக்கான டிப்ஸ்
உங்கள் குழந்தை உயரமா வளரணுமா? ‘இந்த’ உணவுகளை கொடுத்து பாருங்கள்.. title=

குள்ளமாக இருப்பது உடல் நலக்குறைபாடோ, இயலாமையோ கிடையாது. ஒருவர் குள்ளமாக இருக்கிறார் என்றால் அவருக்கு மரபு வழி பிரச்சனை, வைட்டமின் குறைபாடு என பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அல்லது, ஓடி ஆடி விளையாட வேண்டிய வயதில் அதை எல்லாம் செய்யாமல் இருந்திருப்பர். சரியான உடற்பயிற்சி இல்லாத காரணத்தாலோ, உடல் உழைப்பு இல்லாத காரணத்தினாலாே கூட ஒரு சிலர் உயரம் குறைவாக இருக்கலாம். குள்ளமாக இருப்பவர்கள், சிறு வயதில்  “அச்சோ so cute” என்று கொஞ்சப்பட்டாலும், வளர்ந்த பின்பு பிறரால் கேலிக்குள்ளாக்கப்படுகின்றனர் என்பதை சொல்லித்தெரிய தேவையில்லை. 

இப்படி குள்ளமாகவே வளர்ந்தவர்களுக்கு, எப்படியாவது தனது குழந்தையை உயரமாக வளர்த்து விட்டு விட வேண்டும் என்ற ஆசை இருக்கலாம். இதற்கென்று சில உடற்பயிற்சிகளும், உணவுகளும் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?

பால் மற்றும் சீஸ்:

பாலில் கால்சிய சத்துகள் இருக்கின்றன. இதனால்தான், கர்பிணிகளை தினமும் 2 டம்ளர் பால் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுருத்துகின்றனர். இது, உடலில் கால்சிய குறைபாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுமாம். அதே போல,  சீஸும் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட பொருள்தான். இதிலும் கால்சியம் மற்றும் புரத சத்துகள் இருக்கின்றன. அதனால், குழந்தைகளுக்கு மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு அவர்களின் டயட்டில் இதை சேர்த்துக்கொள்ளலாம். 

வாழைப்பழம்:

வாழைப்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. குறிப்பாக கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, மாக்னீசியம் உள்ளிட்ட சத்துகள் இதில் இருக்கின்றன. அது மட்டுமன்றி, இது ரத்த அழுத்த குறைபாடு உடையவர்களுக்கும் அதை சமாளிக்க உதவுவதாக ஒரு மருத்துவ ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் உதவுவதாக கூறப்படுகிறது. எனவே, இதை உங்கள் குழந்தையின் உணவு டயட்டில் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ளாலாம் என்கின்றனர் மருத்துவர்கள். 

ஆரஞ்சு:

ஆரஞ்சு பழம், அதன் நிறத்திற்கு ஏற்றார் போலவே ஆரோக்கியத்திலும் பளிச்சென மின்னக்கூடியது என கூறப்படுகிறது. இந்த பழத்தில் பெரிய அளவிலான வைட்டமின் சி சத்து இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமன்றி, பல் வளரும் பருவத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு, எலும்பு வலுவாகவும், சருமத்தை பாதுகாக்கவும் ஆரஞ்சு சாப்பிடுவது உதவும் என குழந்தைகள் உடல் நல ஆரோக்கிய ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும் படிக்க | பெரிய தொப்பையை சீக்கிரமாக சின்னதாக்க..படுத்துக்கொண்டே செய்யக்கூடிய உடற்பயிற்சிகள்!

பச்சை காய்கறிகள்:

பச்சை காய்கறிகள் என்றால் வேக வைக்காத பச்சை காய்கறிகள் அல்ல. பச்சை வண்ண காய்கறிகள், குழந்தைகள் நன்றாக வளரக்கூடும் என்கின்றனர் மருத்துவர்கள். கீரை, முருங்கைக்காய், கொத்தமல்லி, புரோக்கோலி போன்ற காய்கறிகளை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு உங்கள் குழந்தைக்கு கொடுத்து பழக்கப்படுத்தலாம்.

உடற்பயிற்சிகள்:

>பெரிய இரும்பை பிடித்துக்கொண்டு, தொங்கும் உடற்பயிற்சிகள் குழந்தைகள் வளர உதவும்.

>கயிறு தாண்டுதல், குதித்தல் போன்ற உடற்பயிற்சிகள் உங்கள் குழந்தைகள் உயரமாக வளருவதற்கு தகுந்த உடற்பயிற்சிகள் ஆகும்.

>ஒற்றைக்காலில் குதிப்பது, குழந்தைகள் உயரமாக வளர உதவும் அற்புதமான உடற்பயிற்சி.

>ஓட்டப்பயிற்சி, குதித்து ஓடும் பயிற்சி ஆகியவை உங்கள் குழந்தைகளின் உயர வளர்ச்சியை தூண்டும் ஒரு சில உடற்பயிற்சிகளுள் ஒன்றாகும். 

>நீச்சல் பயிற்சி கற்றுக்கொண்டால், குழந்தைகள் உயரமாக வளருவதோடு மட்டுமன்றி, அவர்களின் இருதயமும் ஆரோக்கியமாக செயல்படும்.

மேலும் படிக்க | இடை சிறுத்து சிக்கென மாற வேண்டுமா? ‘இதை’ சாப்பிடுங்க!

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News