கொரோனாவுக்கு பயோகானின் சொரியாசிஸ் மருந்தை பயன்படுத்த DGCI ஒப்புதல்!

கடுமையான COVID-19 நோயாளிகளுக்கு மிதமான சிகிச்சைக்கு பயன்படுத்த DGCI பயோகான் மருந்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது!!

Last Updated : Jul 14, 2020, 07:31 AM IST
கொரோனாவுக்கு பயோகானின் சொரியாசிஸ் மருந்தை பயன்படுத்த DGCI ஒப்புதல்! title=

கடுமையான COVID-19 நோயாளிகளுக்கு மிதமான சிகிச்சைக்கு பயன்படுத்த DGCI பயோகான் மருந்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது!!

பயோடெக்னாலஜி முக்கிய பயோகானின் "அவசரகால பயன்பாட்டிற்காக" இடோலிஜுமாப் இப்போது மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல் ஆஃப் இந்தியாவின் (DGCI) ஒப்புதலுக்குப் பிறகு கடுமையான COVID-19 நோயாளிகளுக்கு மிதமான சிகிச்சைக்கு பயன்படுத்தப்படலாம் என கடந்த சனிக்கிழமை அறித்துள்ளனர். நாள்பட்ட பிளேக் தடிப்புத் தோல் அழற்சிக்கு சிகிச்சையளிப்பதற்காக 2013 ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட CD6 IgG1 மோனோக்ளோனல் ஆன்டிபாடியான ALZUMAb-யை மீண்டும் தயாரித்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் "இது ஏற்கனவே பல ஆண்டுகளாக சொரியாசிசுக்கு சிகிச்சையளிக்க பயோகான் அங்கீகரிக்கபட்ட மருந்து" என்று மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். ஆனால், மருந்தை பயன்படுத்தும் முன்பாக, நோயாளியிடமிருந்து எழுத்துப் பூர்வமாக அவர்கள் சம்மதம் பெறப்படுவது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் (DGCI) COVID-19 நோயாளிகளுக்கு இடோலிசுமாப் ஊசி செலுத்த அனுமதித்துள்ளது. சுமார், ரூ.32,000 செலவாகும் இந்த சிகிச்சை, நோயாளிக்கு நான்கு குப்பிகளில் ரூ.8,000-க்கு கொடுக்கப்பட உள்ளது.

READ | உண்மையில் கடவுள் ராமர் ஒரு நேபாளி; இந்தியர் அல்ல: நேபாள PM ஒலி!

இருப்பினும், இது வேறு வழியில்லாத நிலையில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் DGCI தெளிவாகக் கூறியுள்ளது. அதாவது, சாதாரண பாதிக்கப்பட்ட நோயாளிகள் இதைப் பயன்படுத்த வேண்டியதில்லை. இந்தியாவில் கொரோனோவைரஸ் நோயாளிகளுக்கு இந்த ஊசி செலுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகள் முடிவுகள் திருப்திகரமாக இருப்பதாக அதிகாரி தெரிவித்தார். இந்த ஆராய்ச்சியில் நுரையீரல் நிபுணர்கள், மருந்தியல் நிபுணர்கள், AIIMS போன்றவற்றின் மருந்து நிபுணர்கள் ஈடுபட்டனர். அதிலும் வெற்றி கிடைத்துள்ளது. 

கொரோனாவுக்கான பல சிகிச்சை மருந்துகள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில், 5 மருந்துகளில் ரெம்டெசிவிர், சிப்ரெமி உட்பட மூன்று மருந்துகள் ஏற்கனவே DGCI-யால் ஒப்புதல் பெற்றுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்காவிற்கும், பிரேசிலுக்கும் அடுத்தபடியாக, உலகின் மூன்றாவது மிக அதிக ஒற்றை நாள் கொரோனோ வைரஸ் அதிகரிப்புடன் உள்ளது இந்தியா.

Trending News