டெங்கு காய்ச்சல்: அறிகுறிகள், தடுக்க வழிகள்!!

Last Updated : Jul 27, 2017, 03:12 PM IST
டெங்கு காய்ச்சல்: அறிகுறிகள், தடுக்க வழிகள்!! title=

டெங்கு காய்ச்சல் ஒரு வைரஸ் நோய். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை டெங்கு கடுமையாக பாதிக்கும்.

பகலில் கடிக்கும் ஏடிஸ் ஈஜிப்டி என்னும் உடலில் கோடுள்ள கொசு மூலம் இந்த வைரஸ் பரவுகிறது.  

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்:-

* அதிக காய்ச்சல் (104 f போகலாம்)

* கடுமையான தலைவலி, வயிற்று வலி, உடல் வலி, தசை வலி, சோர்ந்து போதல்

* உள்ளங்கை மற்றும் கால் பாதம் சிவந்து தடிப்பது

* கண்ணின் பின்புறம் வலி

* தோலில் ஒரு வகை கலர் மாற்றம் ஏற்படுத்தும்.

இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை கலந்து ஆலோசிக்க வேண்டும். 

டெங்கு காய்ச்சல் தடுக்க என்ன வழிகள்:-

* டெங்கு வைரஸை பரப்பும் கொசுவான aedes கொசுவை ஒழிக்க அல்லது கட்டுபடுத்த வேண்டும்.

* உடலில் தேய்க்கும் கொசு ஒலிப்பான் மருந்தான deet உபயோகபடுத்தலாம்.

Trending News