ராஜஸ்தான் எக்ஸிட் போல் முடிவுகள் 2023 மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடந்து முடிந்தன. இதனையடுத்து தற்போது தேர்தல்களுக்கான வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. அதில் ராஜஸ்தான் மாநிலத்தில் யாருக்கு பெரும்பான்மை கிடைக்கும், ராஜஸ்தான் யார் ஆட்சி அமைக்கப்போவது? என்பதைக் குறித்து பார்ப்போம்.
ராஜஸ்தான் மாநிலத்தை பொறுத்தவரை பாஜக, காங்கிரஸ் இரண்டில் ஏதாவது ஒரு கட்சி ஆட்சி அமைக்கும் அல்லது தொங்கு சட்டசபை அமையலாம். வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் படி காங்கிரஸின் சராசரி 96 இடங்களிலும், பாஜக 90 இடங்களிலும், மற்றவை 13 இடங்களிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று கூறுகிறது.
காங்கிரஸ் 42 சதவீத வாக்கு, பாஜக 41 சதவீத வாக்கு கிடைக்கும்
மேலும் கணிக்கப்பட்ட வாக்குப் பங்கின்படி, காங்கிரஸ் 42 சதவீத வாக்குகளையும், பாஜக 41 சதவீத வாக்குகளையும் பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. பாஜக, காங்கிரஸ் தவிர பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) 2 சதவீத வாக்குகளையும், மற்ற சுயேச்சை வேட்பாளர்கள் 15 சதவீத வாக்குகளையும் பெறுவார்கள் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானின் மிகப்பெரிய சட்டமன்றத் தொகுதியான ஜெய்ப்பூரில் பாஜக 42 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 45 சதவீத வாக்குகளையும், பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) 2 சதவீத வாக்குகளையும் பெறக்கூடும்.
மார்வார் பகுதியில் காங்கிரஸ் 18 இடங்களையும், பாஜக 20 இடங்களையும் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. மார்வார் பகுதியில் 41 இடங்கள் உள்ளன.
அசோக் கெலாட் தொடர வேண்டும் -32 சதவீதம் பேர் ஆதரவு
ராஜஸ்தானில் முதலமைச்சராக அசோக் கெலாட் தொடர வேண்டும் என 32 சதவீதம் பேர் அவருக்கு ஆதரவாக வாக்களித்து இருப்பதாக இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்பு காட்டுகிறது.
ராஜஸ்தானில் யார் அமைப்பார்கள்?
ராஜஸ்தானில் அசோக் கெலாட் ஆட்சி திரும்புமா அல்லது பாஜகவின் வனவாசம் முடிவுக்கு வருமா என்பது டிசம்பர் 3ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகே தெரியவரும். ஆனால் அதற்கு முன் வந்த கருத்துக் கணிப்புகள் பொதுமக்களின் நாடித் துடிப்பை அறிய முயற்சித்துள்ளன.
மேலும் படிக்க - “பிரதமர் மோடி என்றால் பநோத்தி” -ராகுல் காந்தி கடும் தாக்கு.. பாஜகவினர் பதிலடி!
ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு என்ன?
ஆக்சிஸ் மை இந்தியா கருத்துப்படி, ராஜஸ்தானில் காங்கிரஸ் 86-106 இடங்களையும், பாஜக 80-100 இடங்களையும் மற்றவர்களுக்கு 9-18 இடங்களும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
POLSTRAT கருத்துக்கணிப்பு என்ன?
POLSTRAT கருத்துப்படி, பாஜக 100-110 இடங்களையும், காங்கிரசுக்கு 90-100 இடங்களும், மற்றவர்களுக்கு 5-15 இடங்களும் கிடைக்கலாம்.
சி வோட்டர் கருத்துக்கணிப்பு என்ன?
சி வோட்டர் கருத்துப்படி, காங்கிரஸ் 71 முதல் 91 இடங்களையும், பாஜக 94 முதல் 114 இடங்களையும், பிஎஸ்பி 0 முதல் 5 இடங்களையும், மற்றவை 9 முதல் 19 இடங்களையும் பெறலாம்.
சட்டசபை தேர்தல் முடிவுகள் எப்பொழுது?
ராஜஸ்தானில் நவம்பர் 25-ம் தேதி தேர்தல் நடைபெற்று, டிசம்பர் 3-ம் தேதி சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ