Chhattisgarh Election 2023: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர், மிஸோரம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுத்தாண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கு முன்னர் இந்த 5 மாநில தேர்தல்தான் அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மிசோரத்திலும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்டம் நவம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வரும் டிசம்பர் 3ஆம் தேதி அறிவிக்கப்படும்.
இந்நிலையில், தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சத்தீஸ்கரில், அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேலின் சோஃபோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பூபேஷ் பாகேல் அவரது X தளத்தில் பதிவிட்ட புகைப்படம்தான் இது வைரலானதிற்கு காரணம். மகாதேவ் சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டுகள் பூபேஷ் பாகேல் மீது சுமத்தப்பட்டது, இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பூபேஷ் பாகேல் பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | சத்தீஸ்கர், மிசோரம் மாநிலங்களில் வாக்குப்பதிவு தொடங்கியது!
அதாவது, தனது அரசாங்கத்தின் சாதனைகள், செயல்படுத்திய திட்டங்கள் குறித்த விவாதத்திற்கு தேதி, நேரம் மற்றும் இடத்தை உறுதிசெய்து அமித் ஷாவுக்கு பூபேஷ் பாகேல் அழைப்பு விடுத்துள்ளார். இந்த விவாதத்திற்கு அமித் ஷா காங்கிரஸாருக்கு அழைப்புவிடுத்தது நினைவுக்கூரத்தக்கது.
"உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களே! நான் உங்கள் சவாலை ஏற்றுக்கொள்கிறேன், அதே பண்டாரியா சட்டமன்ற தொகுதியில் நீங்கள் என்னை (தனது அரசாங்கம் செய்த பணி) குறித்து விவாதம் செய்ய எனக்கு சவால் விடுத்தீர்கள். நீங்கள் இன்னும் மேடை, தேதி மற்றும் நேரத்தை சொல்லவில்லை. ஆனால் பொதுமக்கள் மேடையை தயார் செய்துவிட்டனர்" என்று பாகெல் நேற்றிரவு பதிவிட்டார்.
गृहमंत्री श्री अमित शाह जी!
जिस पंडरिया विधानसभा में आप मुझे काम पर बहस करने की चुनौती देकर गए थे, उसी पंडरिया विधानसभा में जाकर मैंने आपकी चुनौती को स्वीकार किया है।
आपने तो अभी तक मंच, तारीख, समय नहीं बताया है लेकिन जनता ने मंच तैयार कर लिया है।
आप तारीख और समय बता दीजिए.. pic.twitter.com/NfuFT7xufN
— Bhupesh Baghel (@bhupeshbaghel) November 6, 2023
"தயவுசெய்து தேதி மற்றும் நேரத்தை என்னிடம் சொல்லுங்கள்..." என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். இரண்டு இருக்கைகள் கொண்ட கருப்பு சோபாவின் புகைப்படத்தை அவரும் பதிவேற்றியிருந்தார். அதில், பூபேஷ் பாகேல், அமித் ஷா ஆகிய இரு தலைவர்களின் பெயர்கள் அடங்கிய அட்டைகளும் ஒட்டப்பட்டுள்ளது..
முதலமைச்சர் பூபேஷ் பாகேலின் ட்வீட்டுக்கு அமித் ஷா இதுவரை பதில் அளிக்கவில்லை. பாஜக ஆளும் மாநில அரசாங்கங்கள் அதன் ரிபேர்ட் கார்டுகளை காட்ட வேண்டும் என்று காங்கிரஸின் கோரிக்கை வைத்திருந்தது. அதற்கு அமித் ஷா பதிலளித்திருந்தார். பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்திலும் இந்த முறை தேர்தல் நடக்கிறது என்பது இங்கு நினைவுக்கூரத்தக்கது.
மேலும் படிக்க | டெல்லியில் 2 கோடி பேருக்கு கண் எரிச்சல் பாதிப்பு?
அமித் ஷா,"எங்கள் ரிபோர்ட் கார்டுகளை நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? நான் உங்களுக்கு சவால் விடுகிறேன். உங்களுக்கு தைரியம் இருந்தால், கடந்த 5 ஆண்டுகளில் நீங்கள் செய்த பணிகள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 15 ஆண்டுகளில் செய்த பணிகள் குறித்து விவாதியுங்கள்" என கூறியிருந்தார்.
அமித் ஷாவின் இந்த சவாலை ஏற்றுக்கொண்ட சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல்,"உங்கள் 15 ஆண்டுகால ஊழல்கள் மற்றும் ஐந்தாண்டுகளின் எங்கள் வேலைகள் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும். சத்தீஸ்கர் பயப்படவில்லை. உங்கள் பதிலுக்காக காத்திருப்போம்" என்றார்.
சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. 20 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் அதில் மதியம் 1 மணி வரை 44 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பூபேஷ் பாகேலுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், ஆளும் காங்கிரஸ் இரு தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் முன்னணியில் இருந்தது.
முன்னதாக, மகாதேவ் பெட்டிங் செயலியின் உரிமையாளரிடம் இருந்து 508 கோடி ரூபாயை பூபேஷ் பாகேல் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவர் இந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார் மற்றும் தங்கள் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த அமலாக்கத்துறை என்ற ஆயுதத்தை பாஜக அரசு பயன்படுத்துகிறது என்றும் தெரிவித்தார். மொத்தம் 90 தொகுதிகள் சத்தீஸ்கரில் உள்ளன.
மேலும் படிக்க | இந்தியா கூட்டணியில் தொய்வா? நிதீஷ் குமாருடன் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ