8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலை

இந்திய அஞ்சல் துறையில் காலியாக இருக்கும் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 21, 2022, 06:36 AM IST
  • இந்திய அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு
  • 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்
8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலை  title=

India Post Recruitment 2022: போஸ்ட் ஆஃபீஸில் காலியாக இருக்கும் Skilled Artisans காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் indiapost.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விரிவான அறிவிப்பைப் படிக்கவும். விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி அக்டோபர் 17, 2022. மொத்தம் 07 காலி பணியிடங்கள். 

இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு 2022: முழுவிவரம்

விண்ணப்பம் கடைசி தேதி: அக்டோபர் 17, 2022, 17:00 மணி வரை

இந்தியா போஸ்ட் காலியிட விவரங்கள்

Skilled Artisans; 07 காலிப்பணியிடங்கள்

மேலும் படிக்க | தபால் துறையின் வங்கியில் முக்கிய பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு!

துறைரீதியான காலிப் பணியிடம்

M.V.Mechanic(Skilled): 01

எம்.வி. எலக்ட்ரீசியன்: 02 
பெயிண்டர் : 1 
வெல்டர்: 01 
கார்பெண்டர் : 02 

கல்வித் தகுதி

அரசு அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப நிறுவனத்தில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட அனுபவம் இருக்க வேண்டும். M.V மெக்கானிக் பணியிடத்துக்கு விண்ணப்பிப்பவர்கள், எந்தவொரு வாகனத்தையும் ஓட்டுவதற்கு செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்தை (HMV) வைத்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்: ரூ. 19900 முதல் ரூ. 63200 வரை மற்றும் இதர படிச்சலுகைகள் உள்ளன. 

தேர்வு முறை; போட்டித் தேர்வு மூலம் திறமையானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: ஒன்றுக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள், தனித்தனியான விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். குறிப்பிட்ட விண்ணப்ப காலிப் பணியிடத்தின் பெயரை எழுதி, மேனேஜர், மெயில் மோட்டார் சர்வீஸ், சிடிஓ காம்பவுண்ட், தள்ளாக்குளம் மதுரை - 625002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். பதிவுத் தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும். 

மேலும் படிக்க | மாதம் ரூ.92,000 சம்பளத்தில் ESIC-ல் வேலைவாய்ப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News