புதுடெல்லி: நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) தேர்வு முடிவுகள் அறிவிப்புக்காக 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் காத்திருக்கையில், சிபிஎஸ்இ 10 வது தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளைக் குறித்து இன்று அல்லது நாளைக்குள் அறிவிக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இதுக்குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
மாணவர்கள் அனைவரும் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் குறித்து சமீபத்திய செய்திகளை அறிந்துக்கொள்ள சிபிஎஸ்இ-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.nic.in இன் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
சிபிஎஸ்இ 10, 12 வகுப்பு தேர்வு முடிவுகளை தெரிந்துக்கொள்ளும் வழிகள்:
- சிபிஎஸ்இயின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திக்கு செல்லவும் - ரிசல்ட் (Result) என்பதைக் கிளிக் செய்க.
- ஒரு புதிய பக்கம் திறக்கப்படும். அதாவது சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் பக்கம்.
- பத்தாம் வகுப்பு முடிவுகளை தெரிந்துக்கொள்ள "மேல்நிலைப் பள்ளி தேர்வு" (Secondary School Examination) என்பதை கிளிக் செய்யவும்.
- பன்னிரெண்டாம் வகுப்பு முடிவுகளை பார்க்க "சீனியர் மேல்நிலைப் பள்ளி" (Senior Secondary School Examination) கிளிக் செய்க
- உங்கள் ரோல் எண், தேர்வு மையம் எண், பள்ளி மற்றும் அட்மிட் கார்டு ஐடி விவரங்களை உள்ளிட்டு- சமர்ப்பி (Submit) விருப்பத்தை கிளிக் செய்க.
- தற்போது உங்கள் தேர்வு முடிவு திரையில் தோன்றும்.
- அதை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
சிபிஎஸ்இ 10, 12 வாரியத் தேர்வு 2021 முடிவுகளை தயாரிப்பதற்கான முயற்சிகளில் சிபிஎஸ்இ பள்ளிகள் மும்முரமாய் செயல்பட்டு வருகின்றன.
ALSO READ | CBSE Board 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கெட்ட செய்தி! என்ன தெரியுமா?
சிபிஎஸ்இ 10 வது தேர்வு முடிவுகள் ஜூலை 20 ஆம் தேதி அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது, இருப்பினும் தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அட்டவணைப்படுத்தல் செயல்முறையை வாரியம் இன்னும் இறுதி செய்யவில்லை.
அதேசமயம், சிபிஎஸ்இ வகுப்பு 12 போர்டு தேர்வு முடிவுகள் ஜூலை 31 க்குள் அறிவிக்கப்பட உள்ளது. சிபிஎஸ்இ அதன் அனைத்து இணைந்த பள்ளிகளையும் கால அட்டவணையை கண்டிப்பாக பின்பற்றி ஜூலை 16 முதல் ஜூலை 22 வரை மிதமானதை முடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR