நாளை ரம்ஜான்! இன்று பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்

பிறை தெரியாததால் ரம்ஜான் பண்டிகை ஜூன் 16 ம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்துள்ளது. இதனால் ரம்ஜானை முன்னிட்டு இன்று அறிவிக்கப்பட்டிருந்த பொது விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Last Updated : Jun 15, 2018, 09:17 AM IST
நாளை ரம்ஜான்! இன்று பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் title=

பிறை தெரியாததால் ரம்ஜான் பண்டிகை ஜூன் 16 ம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்துள்ளது. இதனால் ரம்ஜானை முன்னிட்டு இன்று அறிவிக்கப்பட்டிருந்த பொது விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில், இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், நேற்று மாலை பிறை தெரியாததால், இன்று கொண்டாடப்பட இருந்த ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் மத்திய அரசின் அலுவலகங்கள் இன்று வழக்கம் போல் இயங்கும். மேலும் புதுச்சேரியிலும் பொது விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதனால் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கேரளாவில் இன்று ரம்ஜான் கொண்டாடப்படுவதால் கன்னியாக்குமரி, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்று ரம்ஜான் கொண்டாடப்பட்டு வருகிறது. 

Trending News