24 ஆண்டுகளுக்கு முன்னர் துலைந்துப் போன மகனை கடும் தேடலுக்கு பின்னர் அவரது தந்தை கண்டுப்பிடித்துள்ளார்!
சீனாவை சேர்ந்த லி சுஹான்ஜி என்பவர் 1994-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் நாள் தனது 3 வயது குழந்தையினை சுற்றுலாவின் போது துலைத்துள்ளார். தொடர்ந்து தேடியும் கிடைக்காத நிலையில் துண்டு பிரசூரங்களை கொண்டு விளம்பரப் படுத்தி தனது மகனை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
தனது தொழிலை விட்டி உலகம் முழுவதும் அலைந்து, சுமார் 1,80,000 குழந்தைகளை கண்டு DNA சோதனை செய்து தற்போது தனது 27 வயது மகன் லி லெய்-னை அவர் கண்டுபிடித்துள்ளார்.
சமீபத்தில் இருவரது DNA-க்களையும் பரிசோதனை செய்த சீன காவல்துறையினர் கண்டுபிடிக்கப்பட்டவர் லி சுஹான்ஜியின் மகன் தான் என உறுதிப் படுத்தியுள்ளார்.
லி லெய் கண்டுப்பிடிக்கப்பட்ட பகுதியில் விசாரணை மேற்கொள்ளப்பட்ட போது, 24 ஆண்டுகளுக்கு முன்னர் அப்பகுதியிக்கு தன் பெற்றோருடன் வந்த அவர் தன் பெற்றோர்களை இழந்து தவித்துள்ளார். அப்போது அப்புகித காவல்துறையினர் அவரது பெற்றோருடன் சேர்த்து வைக்க முயற்சித்த காவல்துறையினர் முடியாமல் போகவே குழந்தையற்ற பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது லி சுஹான்ஜியின் தீவிர முயற்சியால் தன் மகனை அவர் கண்டறிந்துள்ளார்.