8% வட்டி கொடுக்கும் வங்கிகளின் சிறப்பு FD... அக். 31 வரை மட்டுமே வாய்ப்பு..!!

நிலையான வைப்புத்தொகையில் (FD) முதலீடு செய்வதை நீங்கள் கருத்தில் கொண்டால், குறிப்பிட்ட சில சிறந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 22, 2023, 04:58 PM IST
  • சிறப்பு கால வைப்புத் திட்டம் Ind Super 300 நாட்கள் ஜூலை 1, 2023 அன்று தொடங்கப்பட்டது.
  • முதலீட்டாளர்கள் 31 அக்டோபர் 2023 வரை முதலீடு செய்யலாம்.
  • ஐடிபிஐ வங்கியின் சிறப்பு FD திட்டம் 375 நாட்களுக்கான நிலையான முதலீட்டு திட்டம் மாகும்.
8% வட்டி கொடுக்கும் வங்கிகளின் சிறப்பு FD... அக். 31 வரை மட்டுமே வாய்ப்பு..!! title=

FD முதலீட்டிற்கான வட்டி விகிதங்கள்: நிலையான வைப்புத்தொகையில் (FD) முதலீடு செய்வதை நீங்கள் கருத்தில் கொண்டால், குறிப்பிட்ட சில வங்கிகள் வழங்கும் சிறந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தியாவில் உள்ள இரண்டு பெரிய பொதுத்துறை வங்கிகளான இந்தியன் வங்கி மற்றும் ஐடிபிஐ வங்கி ஆகியவை 31 அக்டோபர் 2023 வரை சிறப்பு FD திட்டத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை வழங்குகின்றன. இந்த ஸ்பெஷல் எஃப்.டி ஒரு நிலையான காலகட்டத்திற்கான முதலீட்டு திட்டம் ஆகும். இதில் இயல்பை விட அதிக வட்டி வழங்கப்படுகிறது. இந்த FD முதலீடுகளைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். 

IDBI வங்கியின் சிறப்பு FD திட்டம் (IDBI Bank FD )

ஐடிபிஐ வங்கியின் சிறப்பு FD திட்டம் 375 நாட்களுக்கான நிலையான முதலீட்டு திட்டம் மாகும். இந்த திட்டம் ஜூலை 14 முதல் தொடங்கப்பட்டுள்ளது. IDBI வங்கி 375 நாட்களில் FD முதிர்ச்சியடையும் பொது மக்களுக்கு 7.10% வட்டியையும் மூத்த குடிமக்களுக்கு 7.60% வட்டியையும் வழங்குகிறது. ஐடிபிஐயின் அம்ரித் மஹோத்சவ் எஃப்டி 375 நாட்கள் மற்றும் 444 நாட்கள் ஆகும். 31 அக்டோபர் 2023 வரை IDBI வங்கி வாடிக்கையாளர்கள் இந்தப் பலனைப் பெறலாம். வங்கி 444 நாட்கள் FD க்கு வாடிக்கையாளர்களுக்கு 7.65 சதவீத வட்டி அளிக்கிறது. நான்ரீகாலபிள் FDக்கான அதிகபட்ச வட்டி விகிதம் 7.75 சதவீதம்.

மேலும் படிக்க | மத்திய ஊழியர்களுக்கு ரூ.10288+10288+10288=30864 நிலுவைத் தொகை கிடைக்கும்.. எப்போது?

இண்ட் சூப்பர் 400 நாட்கள் (Ind Super 400 days)

Ind Super FD 400 திட்டம் என்பது பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியின் சிறப்பு FD ஆகும். Callable FD என்பது இதில் நீங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே பணம் எடுக்கும் விருப்பம் கிடைக்கும். இஇத்திட்டத்தில் ரூ.10,000 முதல் ரூ.2 கோடிக்கு குறைவான முதலீடுகளுக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது. இண்ட் சூப்பர் எஃப்டி திட்டத்தில், இப்போது பொது மக்களுக்கு 7.25%, மூத்த குடிமக்களுக்கு 7.75% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 8.00% வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்தியன் வங்கியின் இணையதளத்தின்படி, Ind Super 400 மற்றும் Ind Supreme 300 நாட்கள் என பெயரிடப்பட்ட FD திட்டங்களில் முதலீட்டுத்திட்டதில் முதலீடு செய்வதற்கான காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்போது முதலீட்டாளர்கள் 31 அக்டோபர் 2023 வரை இவற்றில் முதலீடு செய்யலாம்.

இண்ட் சூப்பர் 300 நாட்கள்  (Ind Super 300 days)

இந்தியன் வங்கி (Indian Bank) இணையதளத்தின்படி, சிறப்பு கால வைப்புத் தயாரிப்பு Ind Super 300 நாட்கள் ஜூலை 1, 2023 அன்று தொடங்கப்பட்டது. 300 நாட்களுக்கு இந்த FDயில் ரூ.5000 முதல் ரூ.2 கோடி வரை முதலீடு செய்யலாம். இதற்கு வங்கி 7.05 சதவீதம் முதல் 7.80 சதவீதம் வரை வட்டி தருகிறது. இந்தியன் வங்கி இப்போது பொது மக்களுக்கு 7.05%, மூத்த குடிமக்களுக்கு 7.55% மற்றும் மிகவும் மூத்த குடிமக்களுக்கு 7.80% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

மேலும் படிக்க | 19 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. தீபாவளிக்கு முன் DA ஹைக் கிடைக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News