SBI செய்துள்ள புதிய மாற்றங்கள்! இதற்கெல்லாம் கட்டணம் இல்லை!

SBI Savings Account: எஸ்பிஐ வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்கிய 14 நாட்களுக்குள் கணக்கை மூடிவிட்டால் அதற்கு வங்கி உங்களிடம் எவ்வித கட்டணத்தையும் வசூலிக்காது.  

Written by - RK Spark | Last Updated : Dec 13, 2022, 06:27 AM IST
  • எஸ்பிஐ தனது கொள்கையில் சில மாற்றங்களைச் செய்துள்ளது.
  • சேமிப்புக் கணக்குகளுக்கான கட்டணங்களை வங்கி நீக்கியுள்ளது.
  • குறைந்தபட்ச தொகை இருந்தால் எஸ்பிஐ அபராதம் வசூலிப்பதில்லை.
SBI செய்துள்ள புதிய மாற்றங்கள்! இதற்கெல்லாம் கட்டணம் இல்லை!  title=

மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) அரசு ஊழியர்கள் உட்பட 40 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.  எஸ்பிஐ வங்கி தனது கொள்கையில் சில மாற்றங்களைச் செய்துள்ளது மற்றும் 2020ல் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கான கட்டணங்களையும் வங்கி நீக்கியுள்ளது.  இதில் சுரபி எஸ்பி கணக்குகள், ஃப்ரில் கணக்குகள், அடிப்படை சேமிப்பு கணக்குகள், சிறு மற்றும் பிஎம்ஜேடிஒய் கணக்குகள், பெஹ்லா கடம் மற்றும் பெஹ்லி உதான் கணக்குகள், 18 வயது வரை உள்ள சிறுவர்களின் கணக்குகள், ஓய்வூதியதாரர்களின் கணக்குகள் போன்றவை அடங்கும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களின் கணக்கில் ரூ.2 லட்சம் வரவு, டிஏ அரியர் சமீபத்திய அப்டேட் 

வங்கியின் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச தொகை இருந்தால் அதற்கு எஸ்பிஐ அபராதம் வசூலிப்பதில்லை. இதில் நகர்ப்புற, அரை நகர்ப்புற மற்றும் கிராமப்புற கிளைகள் போன்ற மூன்று வகைகள் அடங்கும்.  மெட்ரோ மற்றும் நகர்ப்புற மையக் கிளைகளில் கணக்கு வைத்திருப்பவர்களின் குறைந்தபட்ச டெபாசிட் ரூ.3000 மற்றும் அரை நகர்ப்புற மையக் கிளைகளில் கணக்கு வைத்திருப்பவர்களின் குறைந்தபட்ச டெபாசிட் ரூ. 2000 ஆகவும், கிராமப்புற கிளைகளில் கணக்கு வைத்திருப்பவர்களின் குறைந்தபட்ச டெபாசிட் ரூ. 1000 ஆகவும் இருந்தது.  ரூ.10 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 2.7% ஆகவும், ரூ.10 கோடிக்கு மேல் டெபாசிட் செய்யும் கணக்குகளுக்கு 3% ஆகவும் உள்ளது மற்றும் வங்கிக் கணக்கில் ரூ.5 லட்சம் இருந்தால் உங்களுக்கு மாதந்தோறும் ரூ.1,125 வட்டியாக கிடைக்கும்.

எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் அந்த கணக்கை மூட விரும்பினால் நேரடியாக வங்கி கிளைக்கு சென்று கணக்கை மூடலாம்.  நீங்கள் சேமிப்புக் கணக்கு தொடங்கிய 14 நாட்களுக்குள் கணக்கை மூடிவிட்டால் அதற்கு வங்கி உங்களிடம் எவ்வித கட்டணத்தையும் வசூலிக்காது.  அதுவே 14 நாட்களுக்கு பிறகு அல்லது 1 வருடத்திற்கு முன்னதாக நீங்கள் சேமிப்பு கணக்கை மூடினால் வங்கி உங்களிடமிருந்து ரூ.500 கட்டணமாக வசூலிக்கும்.  அதேசமயம் 1 வருடத்திற்கு பிறகு கணக்கை மூடினால் வங்கி எவ்வித கட்டணத்தையும் வசூலிக்காது.

மேலும் படிக்க | கார் கடன் வாங்க வேண்டுமா? இந்த ‘4’ விஷயத்தை மறக்காம ஃபாலோ பண்ணுங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News