புதுடெல்லி: ஸ்டேட் பேங்க் ஆஃப் இண்டியா, இந்தியன் ஆயில் இணைந்து ரூபே (RuPay) டெபிட் கார்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த ரூபே டெபிட் கார்டை பயன்படுத்தி பல நன்மைகளைப் பெறலாம். செலவுகளை செய்யும்போதும் கொஞ்சம் பணத்தை மிச்சப்படுத்தலாம்.
வாகனத்திற்கு பெட்ரோல், டீசல் போடும்போது செலுத்தப்படும் தொகைக்கு பரிசும் உண்டு. அதாவது, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் பெட்ரோல் பங்க்களில் பணம் செலவழித்தால் அதற்கு பரிசு புள்ளிகளைப் பெறலாம்.
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து பெட்ரோல்/டீசல் போடும்போது, ரூபே டெபிட் கார்ட் மூலம் பணம் செலுத்தும்போது செலவழிக்கபப்டும் ஒவ்வொரு ரூ.200 தொகைக்கும், 0.75% மதிப்புள்ள லாயல்ட்டி புள்ளிகள் கிடைக்கும்.
ஒரே மாதத்தில் கான்டாக்ட்லெஸ் கார்டு மூலம் ஐந்தாயிரம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனையை டாப்அப் செய்துக் கொள்ளலாம்.
எரிபொருள் நிரப்புவதற்கு மட்டுமல்ல, விருந்து, திரைப்படம், மளிகை மற்றும் பிற செலவுகளையும் இந்த ரூபே கார்டு மூலம் செலவழித்து பரிசு புள்ளிகளை சேமிக்கலாம், அவற்றுக்கு இந்த பரிசுப் புள்ளிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். பெட்ரோல் வாங்குவதற்கு மாதாந்திர உச்ச வரம்பு எதுவுமில்லை.
இந்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்படி, இந்தியன்ஆயிலின் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெட்ரோல் பங்க்களில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, வேலட் பேமென்ட்களை பயன்படுத்தலாம்.
Also Read | மத்திய அரசு ஊழியர்களுக்கு DA, TA உயர்வு பற்றிய முக்கிய செய்தி
டாப் அப் செய்து பணம் செலுத்துவது மற்றும் அதனுடன் இணைந்த பல்வகை சலுகைகள் கிடைக்கிறது. இது, பெட்ரோல் டீசல் வாங்கும் ரூபே கார்டுதாரர்கள், செலவு செய்யும் போதே சேமிக்க முடியும் என்பதால் மிகவும் நல்ல திட்டம் என்று வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR