Idly Dosa Bater Idea In Tamil: எந்த தொழிலை எடுத்தாலும் அதில் ஏதாவது ஒரு இடத்தில் சரிவும் ஏதாவது ஒரு இடத்தில் வெற்றியும் இருக்கும். ஆனால், பெரிதாக சரிவை சந்திக்க வாய்ப்பில்லாத ஒரே தொழில், உணவு சம்பந்தப்பட்ட தொழில்களாகும். கடந்த சில காலமாக, அலுவலகத்தில் வேலை செய்பவர்களும் தனியாக சிறு குறு தொழிலை ஆரம்பித்து விட்டனர். அதிலும், பலர் உணவு சம்பந்தப்பட்ட தொழிலில் முதலீடு செய்ய ஆரம்பித்து விட்டனர். இதற்கான சந்தை மதிப்பும் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
இட்லி, மாவு தோசை பிசினஸ்:
இந்தியாவின் முக்கிய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரமாக இருக்கும் சென்னைக்கு தோசை-இட்லி-சாம்பார் முகமாக விளங்குகிறது. தோசை, இட்லி இவை இரண்டுமே இந்தியா அளவில் பிரபலமான உணவுகளாகும். இவற்றை செய்வதற்கு அரிசி மாவு தேவை. ஹோட்டல்களில் அதிகம் விற்கப்படும் உணவு பொருட்களுள் ஒன்றாகவும், அடிக்கடி வீட்டில் சமைக்கப்படும் உணவாகவும் இருக்கிறது, இட்லி-தோசை. வீட்டு உபயோகத்திற்கு, ஹோட்டல்களுக்கு, கேட்டரிங் செய்பவர்களுக்கு என பல லட்சம் பேருக்கு தேவைப்படும் பொருள், தோசை மாவு.
முன்னர், பல பேர் இட்லி தோசை மாவை வீட்டிலேயே அரைத்து வைத்துக்கொள்வர். ஆனால் நவீன கால உலகில் பலருக்கும் அதற்கான பொறுமை இல்லை. அதனால் ஆங்காங்கே மாவு கடைகள் வளர்ந்து விட்டன. பலர், வீட்டுக்குள்ளேயே மாவு விற்பர். சிலர், இதற்கென்று தனியாக கடையையும் வைத்திருப்பர். இதை எப்படி ஆரம்பிப்பது? இதற்கான முதலீடு என்ன? இதிலிருந்து வரும் லாபம் எவ்வளவு?
தொழில் தொடங்குவது எப்படி?
இட்லி தோசை மாவு பிசினஸிற்காக தனியாக கடை வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த தொழிலை வீட்டிலிருந்தபடியே தொடங்கலாம். அப்படி தொடங்கும் போது நீங்கள் இருக்கும் இடத்தை பொறுத்து உங்களுக்கான முதலீட்டினை நிர்ணயிக்கலாம். முதலில் சிறிய அளவில் தொடங்கி, பின்னர் பெரிதாக வளர்க்கலாம். இதற்காக வீட்டில் இருக்கும் அரிசியையே பயன்படுத்திக்கொள்ளலாம். உங்கள் தொழிலிற்கான வணிகர்கள் வீட்டுக்கு அருகில் இருக்கிறார்களா, அல்லது அருகில் இருக்கும் ஹோட்டல்களில் இருக்கிறார்களா என்பதை பார்க்க வேண்டும்.
அப்படி தனிப்பட்ட முறையில் உங்களுக்கான வாடிக்கையாளர்கள் இருந்தாலும், அவர்களுக்கான பங்கை தவிர, ஹோட்டல்கள், கடைகள் மற்றும் சூப்பர் மார்கெட்டுகளிலும் உங்கள் மாவினை விற்க முடியுமா என்பதை பார்க்க வேண்டும். அப்படி வணிகர்கள் கிடைத்தால் மேலும் லாபம் பார்க்கலாம்.
மேலும் படிக்க | டாப் 5 உணவு வணிக ஐடியாக்கள்: கை நிறைய சம்பாதிக்க, எந்த தொழிலை தொடங்கலாம்?
முதலீடு எவ்வளவு?
தோசை மாவு பிசினஸிற்கு, சுமார் இரண்டு முதல் மூன்று லட்சம் வரை ஆகலாம். இது, நீங்கள் இருக்கும் இடம் பொருத்தும், நீங்கள் தேர்ந்தெடுக்கும் வணிகர்களின் அளவு குறித்தும் மாறலாம். இதற்காக கிரைண்டர் வாங்க வேண்டும், இதன் விலை சுமார் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை இருக்கும். மேலும், பாத்திரம், டப்பு, அரிசி, உளுந்து ஆகியவையும் இருக்க வேண்டும். மாவை தயாரிக்கும் இடமும் வேண்டும். இதற்கெல்லாம் சேர்த்து மேற்கூரிய தொகை ஆகலாம்.
எவ்வளவு மாவிற்கு எவ்வளவு உளுந்து வேண்டும்?
வியாபாரத்திற்கு ஏற்ற பதத்தில் மாவு அரைக்க வேண்டும். உதாரணத்திற்கு 1 கிலோ அரிசி என்றால் அதற்கு 200 கிராம் வரை உளுந்து உபயோகிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. மேலும், இதன் வியாபாரத்தின் தரமும் மிகவும் முக்கியம். அதனால், மட்டமான பொருட்களை உங்களது தொழிலில் பயன்படுத்த வேண்டாம்.
லாபம் எவ்வளவு?
மாவு தொழில் செய்வதற்கு, ஒரு நாளைக்கு 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை செலவு செய்தால், ஆயிரம் வரை லாபம் பார்க்கலாம் என கூறப்படுகிறது. மாதம், பிற செலவுகள் போக கையில் 50 ஆயிரம் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | குறைந்த முதலீடு…நிறைந்த வருமானம்..வீட்டிலிருந்தே ‘இந்த’ தொழில் செய்யுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ