இனி ஆதார் அட்டையை போலவே வாக்காளர் அடையாள அட்டையையும் பதிவிறக்கம் செயலாம். அதற்கான வழிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்..!
இன்னும் இரண்டு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்கான முன் ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India) செய்து வருகின்றது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை (digital voter ID) சில தினங்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது.
கொரோனா தொற்று காரணமாக பல பணிகள் டிஜிட்டல் முறையில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், வணிக ரீதியிலாகவும், பாதுகாப்பு கருதியும் பல இடங்களில், டிஜிட்டல் ஆவண முறைகளே பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் தற்போது வாக்காளர் அடையாள அட்டையும் டிஜிட்டல் முறையில் அறிமுகப்படுத்தியது தேர்தல் ஆணையம் (ECI).
கடந்த வாரத்தில் தேசிய வாக்காளர் தினத்தன்று இந்த மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை (e-EPIC) தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்தது. இந்த டிஜிட்டல் வாக்காளர் அடையாள் அட்டையினை PFD பார்மேட்டில் பெற்றுக் கொள்ள முடியும். இதனை எடிட் செய்ய முடியாது. இந்த புதிய மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை புதிதாக பதிவு செய்யும் வாக்காளர்கள் மட்டுமே கடந்த வாரத்தில் பெற முடிந்தது.
வாக்காளர் அடையாள அட்டையில் மொபைல் எண்ணை பதிவு செய்திருந்தவர்கள் மட்டுமே, e-Voter ID-க்கு பதிவு செய்யலாம். அப்படி அப்டேட் செய்யாதவர்கள் மொபைல் நம்பரை அப்டேட் செய்து, பின்னர் டிஜிட்டல் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டிய நிலை இருந்து வருகின்றது.
ALSO READ | Voter ID Card இல்லாவிட்டாலும், நீங்கள் தேர்தலில் வாக்களிக்கலாம்! எப்படி தெரியுமா?
இந்நிலையில் தங்களது செல்போன் நம்பரை பதிவிட்ட வாக்காளர்கள், நேற்று முதல் (பிப்ரவரி 1) டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை பெற முடியும். இந்த மின்னணு அட்டையில் வாக்காளரின் பெயர், வரிசை எண், பாகம் எண், புகைப்படம் இடம் பெற்றிருக்கும். அதோடு கியூ ஆர் கோடு பயன்பாட்டை கொண்டதாக இந்த அடையாள அட்டை இருக்கும். ஆக உங்களது பதிவு மொபைல் நம்பரை கொண்டு, உங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்வது எப்படி?
இந்த மின்னணு அட்டையை நீங்கள் https://voterportal.eci.gov.in/ என்ற தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேற்று முதல் பழைய கார்டு வைத்திருப்பவர்களும், டிஜிட்டல் முறையில் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உண்மையில் இது பயனுள்ள ஒரு நல்ல விஷயம் தான்.
டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டைகளைப் பதிவிறக்குவதற்கான படிகள்:
1. voterportal.eci.gov.in. -க்கு செல்லவும். தொடர்புடைய விவரங்களை உள்ளிட்டு ஒரு கணக்கை உருவாக்கவும்.
2. கணக்கை உருவாக்கியதும், உள்நுழைந்து “Download e-EPIC” என்று கூறும் மெனுவுக்குச் செல்லவும்.
3. உங்கள் EPIC எண் அல்லது படிவ குறிப்பு எண்ணை உள்ளிடவும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும்.
4. இப்போது, “Download EPIC” என்பதைக் கிளிக் செய்க. இருப்பினும், அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள மொபைல் எண் வேறுபட்டால் கார்டைப் பதிவிறக்க உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC) செயல்முறையை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.
5. KYC மூலம் எண்ணைப் புதுப்பித்த பிறகு, நீங்கள் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையைப் பதிவிறக்கலாம்.
6. உங்கள் e-EPIC எண்ணை நீங்கள் இழந்திருந்தால், அதை voterportal.eci.gov.in -ல் சரிபார்க்கலாம்.
7. டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை வாக்காளர் மொபைல் பயன்பாட்டிலிருந்தும் உருவாக்கலாம், அதை Google Play Store-லிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR