மே 1 முதல் கால் மற்றும் எஸ்எம்எஸ்-க்கு புதிய விதிகள்! டிராய்யின் அதிரடி!

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) மக்களின் பாதுகாப்பிற்காக பல மாற்றங்களை கொண்டு வருகிறது, அந்த வகையில் தற்போது ட்ராய் அமைப்பு மே 1 முதல் சில விதிகளை மாற்றப் போகிறது.  

Written by - RK Spark | Last Updated : Apr 29, 2023, 08:08 AM IST
  • ஸ்பேம் கால்களை தடுக்க புதிய விதிகள்.
  • செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் டிராய்.
மே 1 முதல் கால் மற்றும் எஸ்எம்எஸ்-க்கு புதிய விதிகள்! டிராய்யின் அதிரடி! title=

இந்தியாவில் செயல்பட்டு வரக்கூடிய அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களின் செயல்பாடுகளையும் கண்காணிக்கும் ஒரு அமைப்பு தான் ட்ராய் எனப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆகும்.  இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) மக்களின் பாதுகாப்பிற்காக பல மாற்றங்களை கொண்டு வருகிறது, அந்த வகையில் தற்போது ட்ராய் அமைப்பு மே 1 முதல் சில விதிகளை மாற்றப் போகிறது.  இந்த புதிய விதியின் கீழ், ட்ராய் ஒரு புதிய ஃபில்டரை கொண்டு வரப் போகிறது, இந்த ஃபில்டர் அம்சத்தின் மூலம் மே 1ம் தேதிக்கு பிறகு இனிமேல் யாரும் போலி அழைப்புகள் மற்றும் போலி எஸ்எம்எஸ்களை செய்ய முடியாது.  ட்ராய் அறிவித்தபடி இந்த அம்சம் செயல்பாட்டுக்கு வந்தால் வாடிக்கையாளர்களுக்கு தேவையற்ற அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் வராது மற்றும் வாடிக்கையாளர்கள் தேவையில்லாமல் தொந்தரவு அடையமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க | ரயில் பெட்டிகளில் உள்ள ஐந்து இலக்க எண்ணின் ரகசியம்..கட்டாயம் தெரிஞ்சிகோங்க

இந்த புதிய பாதுகாப்பு அம்சம் தொடர்பாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.  இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மே 1ம் தேதி முதல் மொபைல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களுக்கு செயற்கை நுண்ணறிவு ஸ்பேம் ஃபில்டர்களை பயன்படுத்துகின்றன.  இந்த ஃபில்டர்கள் போலி அழைப்புகள் மற்றும் மெசேஜ்களை தடுப்பதை முதன்மையான வேலையாக செய்கிறது.  இதனை பயன்படுத்துவதன் மூலம் இனிமேல் வாடிக்கையாளர்களுக்கு போலி அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்கள் வருவது தடை செய்யப்படும்.  தொலைத்தொடர்பு நிறுவனத்தைப் பற்றி பேசினால், ஏர்டெல் AI ஃபில்டர்களை நிறுவும் சேவையைத் தொடங்கியுள்ளது.  அதே நேரத்தில் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்களுள் ஒன்றான ஜியோ நிறுவனமும் இந்த ஃபில்டர்களை சில நாட்களில் பயன்படுத்தி தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்று கூறப்படுகிறது.  

ட்ராய் உத்தரவை தொடர்ந்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் நடப்பாண்டில் மே மாதம் 1ம் தேதியிலிருந்து இந்த சேவையை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) பல வருடங்களாகவே வாடிக்கையாளர்களின் மொபைலுக்கு தேவையில்லாமல் வரக்கூடிய போலி அழைப்புகள் மற்றும் போலி எஸ்எம்எஸ்களைத் தடுப்பதில் பல முயற்சிகளை மேற்கொண்டு விதிகளை உருவாக்கி வருகிறது.  இந்த நடவடிக்கையின் ஒருபகுதியாக 10 இலக்க மொபைல் எண்களில் இருந்து அடிக்கடி மொபைலுக்கு அனுப்பப்படும் விளம்பர அழைப்புகளை நிறுத்துமாறு ட்ராய் கூறியுள்ளது.  இது தவிர, அழைப்பாளர் ஐடி அம்சத்தையும் கொண்டு வரும் முயற்சியினையும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொண்டு வருகிறது. 

ட்ராய் அறிமுகப்படுத்தும் இந்த அம்சம் அழைப்பவரின் பெயர் மற்றும் புகைப்படத்தைக் காண்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.  இந்த அம்சத்தை செயல்படுத்துவது தொடர்பாக ட்ராய் அமைப்பு இந்தியாவின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  ட்ராய் மேற்கொள்ளும் நடவடிக்கையின் மூலமாக சரிபார்க்கப்படாத அழைப்பாளர்கள், ஸ்பேமர்கள் மற்றும் பல சிம் கார்டுகளைப் பயன்படுத்தி மோசடி செய்பவர்களைக் கட்டுப்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அழைப்பாளர்களை கண்டறியும் வழியை ட்ராய் அறிமுகப்படுத்தினால் வாடிக்கைகையாளர்களின் ட்ரூகாலர் செயலி பயன்பாடும் குறையும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு அரசின் பரிசு, டிஏ அரியர் முக்கிய அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News