அடல் பென்ஷன் யோஜனா (APY) இந்திய அரசால் கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு திட்டமாகும். இந்த ஓய்வூதியத் திட்டம் இந்தியக் குடிமக்களுக்கு அவர்களின் வயதான காலத்தில் வருமான ஆதாரத்தை வழங்குவதற்காக அரசாங்கத்தால் நடத்தப்படுகிறது. குறிப்பாக அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்களுக்காக இந்த ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அடல் பென்ஷன் யோஜனாவின் கீழ், வாடிக்கையாளர்கள் தங்களின் வசதிக்கு ஏற்ப ஒரு நிலையான தொகையை மாதாந்திர, காலாண்டு அல்லது ஆண்டு அடிப்படையில் இந்த திட்டத்தில் முதலீடு செய்துக்கொள்ள முடியும். இந்த பணத்தை முதலீடு செய்ய ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) பங்களிப்புகள் செய்யப்படுகின்றன. மேலும் ஓய்வு பெற்ற பிறகு வாடிக்கையாளர்களுக்கு இந்த பணம் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.
அதேபோல் இந்த திட்டமானது 18 முதல் 40 வயது வரை உள்ள அனைத்து இந்திய குடிமக்களுக்கும் பொருந்தும். மேலும் 01 அக்டோபர் 2022 முதல் வரி செலுத்துபவராக இருக்கும் எந்தவொரு குடிமகனும் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சேரத் தகுதியற்றவர் ஆவார். அதாவது, இந்த திட்டத்தில் அத்தகையவர்கள் முதலீடு செய்ய முடியாது. அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் 1000 முதல் 5000 ரூபாய் வரை கிடைக்கும். அத்துடன் வாடிக்கையாளர் இறந்து விட்டால், இந்த ஓய்வூதியத் தொகை நாமினியால் பெறப்படும்.
மேலும் படிக்க | லோன் முன்கூட்டியே கட்டி முடிக்கும்போது கனவத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்..!
ஓய்வூதியத்தின் தேவைகள் :
* அதிக வயதின் காரணமாக குறைந்த ஊதியம் பெறுதல்
* சம்பாதிக்கும் குடும்ப உறுப்பினர் தனிக்குடித்தனம் செல்லுதல்
* அன்றாட வாழும் செலவு அதிகரித்தல்
* சராசரி வாழ் நாள் அதிகரித்தல்
* உறுதி செய்யப்பட மாதாந்திர வருமானத்தின் மூலம் கண்ணியமான வாழ்க்கை வாழலாம்.
அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் எவ்வளவு ஓய்வூதியம் கிடக்கும் ?
இத்திட்டத்தின் கீழ் 60 வயது ஆன சொந்தாதாரர்கள் மாதாந்திர பங்களிப்பு தொகையாகப் பொறுத்து உத்திரோதமான ஓய்வூதியமாக மாதம் தோறும் ரூ 1000/-, ரூ 2000/-, ரூ 3000/-, ரூ 4000/-, ரூ 5000/- வரை பெறலாம்.
மேலும் படிக்க | 8th Pay Commission வருகிறதா? 44% ஊதிய உயர்வு விரைவில்? மாஸ் அப்டேட்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ