தமிழகத்தின் காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதை தொடர்ந்து, விவசாய அமைப்புகள், பொது மக்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் காவிரி போராட்டம் தமிழகத்தில் நாளுக்கு நாள் வீரியமடைந்து வருகிறது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழ் திரையுலகினர் இன்று கண்டன போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது. போராட்டத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர்கள் சிவகுமார், விஜய் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விக்ரம் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் கலந்து கொள்வார்கள் என தெரிவித்திருந்தனர். இப்போராட்டத்தில் கமல், ரஜினி, விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, விஷால், கார்த்தி, பார்த்திபன், சிவகுமார், சத்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் ரேகா, தன்ஷிகா உள்ளிட்ட நடிகைகளும், இசையமைப்பாளர் இளையராஜா, வைரமுத்து, மதன் கார்க்கி, தயாரிப்பாளர்கள் தாணு, ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.
அனைவரும் கலந்து கொண்ட நிலையில் அஜித் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளாதது அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து, தமிழர்களுக்காக அவர் வரமுடியாமல் போய்விட்டதா? திருவான்மியூர் வீட்டிலிருந்து போராட்டம் நடக்கும் இடத்திற்கு 12 கி.மீ அவரால் பயணம் செய்யமுடியாதா? அவர் வீட்டை விட்டு வரவேமாட்டாரா என கேள்வி கேட்டு டிவிட்டரில் தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.