தமிழ்நாடு பட்ஜெட் 2024 -25: முக்கிய திட்டங்கள்..!
அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் இனி ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிப்பு
6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் வங்கி கணக்கு 1000 ரூபாய் செலுத்தப்படும்
அடுத்த 6 ஆண்டுகளுக்குள் குடிசை இல்லா தமிழகத்தை உருவாக்கும் வகையில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட திட்டம். ஒரு வீட்டுக்கு ரூ.3.5 லட்சம் ஒதுக்கீடு
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஊரக பகுதிகளில் இருக்கும் 5 ஆம் வகுப்பு வரையிலான அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும்.
மூன்றாம் பாலினத்தவருக்கான கல்லூரி படிப்புக்கான முழு கல்விச் செலவையும் தமிழக அரசே ஏற்கும்.
10 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்க அரசு திட்டம். வங்கி கடன் இணைப்பு திட்டத்துக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
மத்திய அரசு பணி தேர்வுகளுக்கு தயாராகும் 1000 மாணவர்களுக்கு உதவும் வகையில் 6 மாத உறைவிட பயிற்சிக்கு 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு
மலைப்பகுதிகளிலும் இனி கட்டணமில்லா பேருந்து இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு