ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டங்களில் அதிக நன்மைகளை கொடுக்கக் கூடியது என்பதைக் கண்டறிய, இன்று BSNL வழங்கும் ரூ.997 திட்டம் மற்றும் ஜியோ வழங்கும் ரூ.999 திட்டத்தை ஒப்பீடு செய்யலாம்.
BSNL ரூ.997 ரீசார்ஜ் திட்டத்தில், பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி அதிவேக டேட்டா, கிடைக்கும்.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்திலும், 2 ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கும்.
ரிலையன்ஸ் ஜியோ, BSNL திட்டங்கள் இரண்டிலும் வரம்பற்ற இலவச அழைப்பு மற்றும் தினமும்100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகள் கிடைக்கும்.
ரிலையன்ஸ் ஜியோ, BSNL திட்டங்கள் இரண்டின் ரீசார்ஜ் கட்டணத்தை ஒப்பிடும் போது 2 ரூபாய் என்ற அளவில் தான் வித்தியாசம் உள்ளது.
ஆனால், ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் இரண்டு திட்டங்களின் வேலிடிட்டி காலத்தை பார்த்தால் குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை காணலாம்.
ஒருபுறம் ஜியோ திட்டம் 98 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் நிலையில், மறுபுறம் நீங்கள் BSNL திட்டம் 160 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
டேட்டா அளவில், பிஎஸ்என்எல் திட்டம், ஜியோவை விட 124 ஜிபி கூடுதல் டேட்டாவை வழங்குகிறது.
ஜியோ ரீசார்ஜ் திட்டத்துடன் ஒப்பிடும்போது பிஎஸ்என்எல் திட்டம் நிச்சயம் கூடுதல் பலனை அளிக்கிறது என்பதை மறுக்க இயலாது.