ஹர்திக் - நடாஷா ஜோடி திருமண உறவில் இருந்து பிரிவதாக அறிவித்தனர்.
இருவரும் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று அறிவித்தனர்.
மகன் அகஸ்தியாவை இருவருமே கவனித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
2020ஆம் ஆண்டில் லாக்டவுனில் இருவருக்கும் முதலில் திருமணம் எளிமையாக நடந்தது.
2023இல் மீண்டும் ஒருமுறை இருவருக்கும் உதய்பூரில் இந்து, கிறிஸ்துவ முறையில் திருமணம் நடந்தது.
2018இல் மும்பையில் ஒரு நைட் கிளப்பில் இருவரும் சந்தித்தனர். இவர்களுக்கு முதல் சந்திப்பிலேயே காதல் மலர்ந்துள்ளது.
அதன்பின்னர், ஹர்திக் பாண்டியா தனது பிறந்தநாள் விழாவுக்கு அழைத்துள்ளார். அங்கு தொடங்கிய காதல் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.