இந்து மத தர்மப்படி, அஷ்ட கர்மாக்கள் என்பவை வசியம், மோகனம், உச்சாடனம், ஸ்தம்பனம், ஆகர்ஷனம், வித்துவேடனம், பேதனம், மாரணம் ஆகியவை ஆகும்
அஷ்ட கர்மாக்களை முறைப்படி கற்றுத் தெளிந்தால் ஆன்மீகத்தில் பக்குவம் ஏற்படும். ஆதிகணபதி மந்திரங்களை ஜெபிப்பதன் மூலம் அஷ்டமா சக்திகளை பெறலாம்
அதிகாலையில் குளித்த பிறகு விபூதியை அணிந்து வடக்கு முகமாக ஆசனத்தில் அமர வேண்டும். தீபம் ஏற்றி வைத்து அதன் எதிரில் அமர்ந்து கொண்டு புருவ மத்தியில் மனதை வைத்து, "சிவ சிவா ஓம் ரீம் அங் ஆதி கணபதி'" என்று தினமும் 1008 முறை ஜெபித்து வந்தால் நினைத்த காரியங்கள் எல்லாம் சித்தியாகும்.
"ஓம் கிலி சிங் மகா கணபதி" என்று தினந்தோறும் 1008 முறை தொடர்ந்து 108 நாட்கள் ஜெபித்தால் மந்திரம் சித்தியாகும்
மேற்கு முகமாய் தர்ப்பாசனத்தில் அமர்ந்து கொண்டு "ஓம் ஸ்ரீ கிலி நடன கணபதி" என்ற நடன கணபதி தம்பன மந்திரம் ஜெபித்தால் எதிரிகள் விலகுவார்கள்
"ஓம் கிலி சவ் சத்தி கணபதி" என்ற மூல மந்திரத்தை தினசரி 1008 என 108 நாட்கள் ஜெபித்தால் நோய்கள் அகன்று, ஆரோக்கியம் மேம்படும்.
"ஓம் ரீங் கிலி வாலை கணபதி' என்ற ஆகர்ஷண மந்திரத்தை தினசரி 1008 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து 108 நாட்கள் ஜெபித்து வந்தால், ஆகர்ஷண சித்தி கிடைக்கும்.
"ஓம் ஸ்ரீம் ரீம் உச்சிட்ட கணபதி' என்று தினமும் 1008 முறை ஜெபித்து வந்தால், சகல காரியங்களும் சித்தியாகும்.