கொண்டைக்கடலையில் ஆரோக்கியத்திற்கு தேவையான பல விஷயங்கள் உள்ளது. நிறைய சத்தான வைட்டமின்களை கொண்டுள்ளது.
கொண்டைக்கடலையில் மெக்னீசியம், பொட்டாசியம் என பல தாதுக்கள் நிறைந்துள்ளது. எனவே ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
கொண்டைக்கடலை தாவரத்தில் இருந்து கிடைக்கும் உணவாகும். எனவே சைவம் சாப்பிடுபவர்களுக்கு நல்லது.
கொண்டைக்கடலையில் புரதம், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளது. இவை வயிற்றை நிரப்ப செய்து கூடுதல் உணவு சாப்பிடுவதை தடுக்கிறது.
கொண்டைக்கடலையில் புரதம், நார்ச்சத்து உள்ளதால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு மிகவும் உதவும்.
கொண்டைக்கடலையில் முக்கிய தாதுக்கள் நிறைந்துள்ளதால் செரிமான அமைப்பிற்கு மிகவும் நல்லது.
கொண்டைக்கடலையில் கோலினின் நிறைந்துள்ளது. இது மூளையை சுறுசுறுப்பாக்கி செயல்பாட்டை அதிகரிக்கிறது.
உடலில் இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் தினசரி கொண்டைக்கடலை சாப்பிட்டு வந்தால் இரும்புச்சத்து அதிகரிக்கும்.