கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால், மாரடைப்பு, இதய கோளாறுகள் போன்ற தீவிர நோய்களுக்கு நாம் ஆளாகலாம். ஆகையால் இதை கட்டுக்குள் வைக்க வேண்டியது மிக அவசியமாகும்.
உடலில் அதிகமாகும் கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் சில இயற்கையான, ஆரோக்கியமான உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
காலை வேளையில் வெந்நீர் அல்லது வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும். இது செரிமானத்தை சீராக்கவும் உதவும்.
காலை வேளையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு குடிப்பதால் கொலஸ்ட்ரால் அளவை எளிதாக கட்டுப்படுத்தலாம். இது உடல் எடையை குறைக்கவும் உதவும்.
உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளவர்கள் காலை உணவில் தினமும் ஓட்ஸ் உட்கொள்ளலாம். இதில் உள்ள நார்ச்சத்து வயிற்றுக்கு நிறைவான உணர்வை அளிப்பதுடன் கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்க உதவுகின்றது.
பாலில் ஆளி விதைகளை நசுக்கியோ அல்லது பொடி செய்தோ சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடலில் அதிகரிக்கும் கொழுப்பின் அளவை குறைக்கலாம்.
பூண்டில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. உடலில் அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் இது உதவியாக இருக்கின்றது.
இவை தவிர புகைபிடிப்பது, மதுபானம் அருந்துவது போன்ற பழக்கங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். ஆகையால் அவற்றை தவிர்ப்பது நல்லது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.