தமிழ் ஆண்டின் இறுதி மாதமான பங்குனியில் உத்திர நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவதால் பங்குனி உத்திரம் என்று அழைக்கப்படுகிறது
பௌர்ணமி நாளன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி முகப்பெருமானை வணங்க வேண்டும்
பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தன்று முருகனை வழிபடுவதால் வல்வினைகள் தீரும்
ஆறுமுகக் கடவுளை அனுதினமும் வணங்கினால் துன்பம் தொலைந்தோடும் என்றால், உத்திர நாளன்று வணங்கி, முப்பிறவியின் கர்மாக்களையும் களையலாம்
பங்குனி உத்திரத்தன்று முருக கடவுளுக்கு வள்ளி தெய்வயானையுடன் திருமணம் நடைபெறுவதை பார்ப்பது நல்லது
கந்த சஷ்டி கவசம், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் போன்ற நூல்களை பங்குனி உத்திர நாளன்று படிக்க வேண்டும்.
இறைவனையே நினைத்து மனம் ஒன்று பட ‘ஓம் சரவண பவ’ என்ற மந்திரத்தை நாள் முழுக்க உச்சரிக்கலாம். ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு விரதம் இருக்க வேண்டும்.
அவரவர் வழக்கப்படி பங்குனி உத்திரத்தன்று இறைவனை வணங்கலாம். இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளவை பொதுவான கருத்துக்களின் அடிப்படையிலானவை. இதற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது