செயற்கை இனிப்புகள், ஆரோக்கியமானவை அல்ல. அவை குடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பாக்டீரியர்களை உண்டாக்குகிறது.
கொழுப்பு நிறைந்த பொறித்த உணவுகள், குடலை பாதிக்கும் பாக்டீரியாக்களை உண்டாக்கி, குடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.
கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு நிறைந்த சிவப்பு இறைச்சி உணவுகள் குடலில் வீக்கத்தை உண்டாக்கி, குடல் சுடர்களை பாதிக்கும்.
சர்க்கரை, கொழுப்பு, ரசாயனம் நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள் குடல் சுவர்களை பாதிக்கும்.
கோதுமை, பார்லி போன்ற தானியங்களில் குளூட்டன் என்னும் புரோட்டின் அதிகம் காணப்படுகிறது. அளவிற்கு அதிக குளூட்டன் குடலில் வீக்கத்தை ஏற்படுத்தி, வயிற்றுப் போக்கை உண்டாக்கும்.
மதுபானங்கள் குடல் சுவர்களை பாதித்து, குடலில் வீக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.