மலையாள நடிகையான நிகிலா விமல் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
2015ம் ஆண்டு லவ் 24x7 என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இவர் நடித்த முதல் தமிழ் படம் பஞ்சுமிட்டாய் ஆகும். இதில் மகாபா ஆனந்துக்கு ஜோடியாக நடித்தார்.
பின்பு சசிகுமார் நடித்த வெற்றிவேல் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
அதன்பிறகு, சசிகுமாருடன் மீண்டும் கிடாரி படத்தில் நடித்தார்.
SIIMA விருதுகள் 2017ல் கிடாரிக்காக சிறந்த அறிமுக நடிகையாக அவர் பரிந்துரைக்கப்பட்டார்.
கேரளா கௌமுதி ஃபிளாஷ் மூவிஸ் விருது 2019ல் அரவிந்தன்டே அதிதிகலுக்கு மிகவும் பிரபலமான நடிகைக்கான விருதை வென்றார்.
2019ல் தம்பி படத்திலும், 2023ல் போர் தோழில் என்ற பிரமாண்ட வெற்றி படத்தில் நடித்து இருந்தார்.
தற்போது குருவாயூர் அம்பலநடையில் படம் மூலம் மீண்டும் ட்ரெண்டிங்கில் உள்ளார் நிகிலா விமல்.