பூண்டை தினமும் தவறாமல் உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.
பூண்டில் எண்ணற்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படுத்தப்பட்டு நோய்கள் அண்டாமல் இருக்கும்.
உடலில் சேரும் நச்சுக்களையும் அழுக்குகளையும், சிறுநீர் மூலம் வெளியேற்றும் ஆற்றல் பூண்டிற்கு உண்டு.
வாயு, மலச்சிக்கல், அஜீரணம் போன்ற செரிமானம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற பூண்டு உதவும்.
பூண்டில் உள்ள அல்லிசின் கெட்ட கொல்ஸ்டிராலை எரிக்கும் ஆற்றல் கொண்டது. எனவே இதய நோய்கள் அண்டாது
தினமும் உணவில் பூண்டு சேர்ப்பதன் மூலம் உடல் எடையை கட்டுப்படுத்தி, தொப்பை கொழுப்பையும் குறைக்கலாம்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.