மோதல்களை தவிர்த்து ஒரு விஷயத்தை அமைதியான முறையில் தீர்க்கவும். நல்லிணக்கத்தை பேண வேண்டும்.
வாழ்க்கையில் நேர்மையை கடைபிடிக்க வேண்டும். இதுவே நிறைவான வாழ்க்கைக்கு அடித்தளம்.
மற்றவர்கள் சரியாக இருக்க வேண்டும் என்று நினைக்காமல், முதலில் நீங்கள் சரியாக நடந்து கொள்ளுங்கள்.
முக்கியமான விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்துங்கள். ஆடம்பரமாக இருப்பது வளர்ச்சியை பாதிக்கும்.
பெரிய சாதனைகள் புரிவதற்கு நேரம் தேவை. எனவே விடாமுயற்சியுடன் வெற்றியை ருசியுங்கள்.
தன்னலமற்ற சேவை வாழ்க்கையை வளமாக்குகிறது. இது சமூக பிணைப்புகளை பலப்படுத்துகிறது.
அலுவலகம், வீடு, நண்பர்கள் என அனைவரிடமும் ஒற்றுமை பேணுங்கள்.