டிஏ ஹைக் அறிவிப்புக்கான நேரம் வந்துவிட்டது. இனி எப்போது வேண்டுமானாலும் அகவிலைப்படி அதிகரிப்பு அறிவிக்கப்படலாம்.
நவராத்திரியின் போது மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மிகப்பெரிய பரிசு கிடைக்கக்கூடும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில், அகவிலைப்படியில் 3%-4% அதிகரிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.
டிஏ உயர்வு ஜூலை 2024 முதல் செயல்படுத்தப்படும். ஆகையால் ஜூலை முதலான டிஏ அரியர் தொகையும் கிடைக்கும்.
அகவிலைப்படி 3% அதிகரிக்கப்பட்டால் ரூ.18,000 அடிப்படை ஊதியம் உள்ளவர்களுக்கு மாதா மாதம் சம்பளத்தில் ரூ.540 அதிகமாக கிடைக்கும்.
அகவிலைப்படி 4% சதவீதம் அதிகரிக்கப்பட்டால் மாதம் 720 ரூபாய் அதிகமாக கிடைக்கும்.
மொத்த ஊதியம் 30,000 ரூபாயாக இருந்து அடிப்படை ஊதியம் 18,000 ரூபாயாக இருப்பவர்களுக்கு 50% DA அடிப்படையில் இப்போது ரூ.9,000 கிடைக்கிறது.
டிஏ 3% சதவீதம் அதிகரித்தால் இந்த தொகை 9,540 ரூபாயாக அதிகரிக்கும். 4% அதிகரித்தால் இந்தத் தொகை ரூ. 9,720 ஆக இருக்கும்.