இரத்த நாளங்களில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்தால், இதய ஆரோக்கியம் பாதிக்கப்படுகின்றது. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது.
கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தி இதய பிரச்சனைகள் வராமல் காக்கும் ஐந்து காய்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதில் கத்தரிக்காய் உதவும். இதில் உள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, இதில் உள்ள பிற ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளவர்கள் வெண்டைக்காயை உட்கொள்ளலாம். இது கொலஸ்ட்ரால் அதிகரிப்பதை குறைக்கிறது. இதில் உள்ள பண்புகள் கொலஸ்ட்ராலை உடலை விட்டு வெளியேற்ற உதவுகின்றன.
கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதில் பாலக் கீரை உதவியாக இருக்கும். கொலஸ்ட்ரால் இரத்த நாளங்களில் சேர்வதை இது தடுக்கும். இதய ஆரோக்கியத்திற்கு இதை தினமும் உட்கொள்ளலாம்.
புரோக்கோலியில் உள்ள மருத்துவ குணங்கள் இதய ஆரோக்கியத்திற்கும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ள நோயாளிகள் தினமும் ப்ரோக்கோலியை உட்கொள்ளலாம் இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
இவற்றுடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சமச்சீரான உணவு, உடல் செயல்பாடுகள் ஆகியவையும் கொலஸ்ட்ராலை குறைக்க அவசியம் தேவை.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.