உப்பு அதிக சோடியம் குளோரைடு கொண்ட ஒரு கனிமமாகும்.
பொதுவாக அனைத்து உணவிலும் உப்பு சேர்க்கப்படுகிறது.
உப்பு நமது உடலுக்கு அவசியம் என்றாலும் அதிகப்படியான உப்பு ஆரோக்கியத்திற்கு பக்க விளைவை ஏற்படுத்தும்.
அதிகப்படியான உப்பு எடுத்து கொண்டால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
இது இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
சிறுநீரகப் பிரச்சினைகள் எலும்பு இழப்பு, தாகம் மற்றும் சுவை உணர்வை பாதிக்கும்.
உப்பு அதிகமானால், உடலில் நீர் தேங்கி கை மற்றும் கால்களில் வீக்கம் ஏற்படும்.
அதிக உப்பு கொண்ட உணவுகள் வயிற்று புற்றுநோயை உருவாக்கும்.