ரத்த சர்க்கரையின் அளவை காட்டும் சிறுநீரின் நிறம்!

Malathi Tamilselvan
Dec 11,2023
';

நீரிழிவு

நமது கணையம் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாதபோது ரத்த சர்க்கரை அளவு கணிசமாக அதிகரிக்கிறது, இரத்தச் சர்க்கரையின் சில அறிகுறிகள் சிறுநீரிலும் காணப்படுகின்றன. சிறுநீரில் தென்படும் நீரிழிவு நோயின் அறிகுறிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

';

தீராத நோய்

​​தவறான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக ஏற்படும் நோய்கலில் ஒன்று நீரிழிவு நோய். இது ஒரு தீராத நோயாகும், இதை உணவு மற்றும் மருந்துகளால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.

';

குளுக்கோஸ்

சிறுநீரில் உள்ள குளுக்கோஸ் (சர்க்கரை) அளவு அதிகரிப்பதால், சிறுநீரின் வாசனை மாறுபடும். புளிப்புடன் கூடிய இனிப்பு மணம்நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம். இந்த அறிகுறிகளை உணர்ந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

';

நிற மாற்றம்

சிறுநீரில் நுரை அல்லது புகை போல நிற மாற்றம் என்பது நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம். உண்மையில், இரத்தத்தில் சர்க்கரை அதிகமாக இருக்கும்போது, ​​​​நமது சிறுநீரகங்களால் அதை சரியாக வடிகட்ட முடியாது. இதன் காரணமாக, சிறுநீரில் நுரை உருவாகத் தொடங்குகிறது.

';

சிறுநீர் தொற்று

நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுநீர் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக, பெண்களுக்கு இந்த பிரச்சனை அதிகமாக இருக்கும். நீரிழிவு நோயினால், நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறதுஎனவே அடிக்கடி சிறுநீர் தொற்று ஏற்பட்டால் கவனமாக இருக்கவும்

';

அடிக்கடி சிறுநீர் கழித்தல்

நீரிழிவு நோயின் முக்கிய அறிகுறிகளில் ஒன்று அடிக்கடி சிறுநீர் கழிப்பது. கடந்த சில நாட்களாக உங்களுக்கு இதுபோன்ற பிரச்சனை இருந்தால், உங்கள் இரத்த சர்க்கரையை பரிசோதிக்க வேண்டும். இரவில் பல முறை சிறுநீர் கழிக்க நேரிட்டால், அது சர்க்கரை நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

';

சிறுநீரின் நிறம்

நீரிழிவு சிறுநீரகத்தை நேரடியாக பாதிக்கிறது. இதன் காரணமாக, உடலில் புரதத்தின் அளவு அதிகரிப்பதால் சிறுநீரின் நிறம் மாறத் தொடங்குகிறது. சிறுநீரின் நிறம் வெளிர் பழுப்பு அல்லது மஞ்சள் நிறமாக இருந்தால், அது நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story