மேற்குவங்க மாநிலத்தில் மேற்கொண்ட ஆய்வில், நெல் மற்றும் கோதுமை மணிகளில் 1960களில் இருந்த தாதுப்பொருட்களின் அளவு தற்போது 19-45 சதவீதம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது
கால்சியம், இரும்பு, ஜின்க் போன்ற தாதுப் பொருட்களின் அளவு குறைந்ததுடன், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுப்பொருட்களின் அளவு அபாயகரமாக அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது
ஆர்செனிக் 16 மடங்கு மற்றும் குரோமியம் 4 மடங்கு உயர்ந்து பெரும் சுகாதாரக் கேடுகளை மக்களிடையே எற்படுத்தி வருகிறது.
ஆர்செனிக், குரோமியம், பேரியம், ஸ்ட்ரான்சியம், அலுமினியம் போன்றவைகளின் அளவும் அரிசியில் அதிகரித்து காணப்படுகிறது.
கோதுமையில் உள்நுழைக்கப்பட்ட Rht gene மூலக்கூறின் காரணமாக, கோதுமையின் இயற்கை எதிர்ப்புத் தன்மை மாற்றியமைக்கப்பட்டதே நச்சு வேதிப்பொருட்கள் தண்டுப்பகுதியிலிருந்து, தானிய மணிகளில் அதிகம் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
வேளாண் துறைக்கு அடிப்படையான மண் வளத்தை காக்க வேதிப்பொருட்கள் அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்
அரிசி மற்றும் கோதுமையில் உள்ள கால்சியம் சத்து குறைந்துள்ளது இயற்கையான ஊட்டத்தை உடலுக்கு குறைக்க காரணமாகிறது. கால்சியம் சத்து எலும்பு வலுவுடன் இருக்க மிக முக்கியமானது.
இரும்புச்சத்து ரத்த உற்பத்திக்கு முக்கியமானது என்றால், ஜின்க் சத்து நோய் எதிர்ப்பு சக்திக்கும், நரம்பு மற்றும் இனப்பெருக்க மண்டலங்களின் செயல்பாட்டிற்கும் முக்கியமானது. அரிசி மற்றும் கோதுமையில் உள்ள இதுபோன்ற முக்கிய ஊட்டச்சத்துக்களை ரசாயன பயன்பாடு குறைத்துவிட்டது
அறிவியல் ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்த கட்டுரையில் உள்ள தகவல்களை ஜீ மீடியா தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை