உங்கள் உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால் அதன் அறிகுறிகள் உடலில் தென்படும்.
உயர் இரத்த அழுத்தம், உடல்நிலையில் பிரச்சனை, மூட்டு வலி, உடலில் வீக்கம், முழங்கையில் வீக்கம் போன்றவை ஆரம்பகால அறிகுறிகள் ஆகும்.
இது தவிர சிறுநீரக நோய், மாரடைப்பு போன்றவையும் ஏற்படலாம். அதே நேரத்தில், யூரிக் அமிலத்தின் அதிகரிப்பு கர்ப்பத்தில் சிரமத்தை ஏற்படுத்தலாம்.
ஆண் அல்லது பெண்ணின் யூரிக் அமிலத்தின் இயல்பான அளவு என்னவாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
பெண்களில் பெரியவர்களுக்கு யூரிக் அமிலத்தின் அளவு 2.5 முதல் 6 mg/dL என்ற அளவில் இருக்க வேண்டும்.
ஆண்களைப் பொருத்தவரையில் பெரியவர்களுக்கு யூரிக் அமிலத்தின் அளவு 3.5 முதல் 7 mg/dL என்ற அளவில் இருக்கலாம்.
இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.