கோவையில் 9 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜகவின் அண்ணாமலை 1,80,941 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
இதன் மூலம் திமுகவின் கணபதி ராஜ்குமாரை விட 45,569 வாக்குகள் பின்தங்கியுள்ளார்.
தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் 48, 784 வாக்குகள் பின்தங்கி உள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெரும் நிலையில் உள்ளார்.
நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட எல் முருகன் திமுகவின் ஆ ராசாவிடம் தோல்வியை சந்திக்க உள்ளார்.
இருவருக்கும் கிட்டத்தட்ட 2,28,599 வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளது.
திருநெல்வேலியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் 1,35,460 வாக்கு வித்தியாசத்தில் பின்தங்கி உள்ளார்.
மத்திய சென்னையில் போட்டியிட்ட வினோஜ் பி செல்வம் 1,31,998 வாக்குகள் பின்தங்கி உள்ளார்.