வெயில் காலத்தில், வெப்பம், தூசி, மாசு மற்றும் வியர்வை போன்றவற்றால் கூந்தலில் அழுக்கு சேரத் தொடங்குகிறது.
அத்தகைய சூழ்நிலையில், முடியை சுத்தமாக வைத்திருக்க ஷாம்பு செய்வது அவசியமாகும், ஆனால் இதனால் முடி உலர்ந்து உயிரற்றதாக மாறத் தொடங்கிவிடுறது.
இதற்கு இரண்டு அற்புதமான வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தலாம்.
ஷாம்பூவில் அரிசி தண்ணீர் மற்றும் கறிவேப்பிலை கலந்து பயன்படுத்தலாம். இதற்கு கறிவேப்பிலையை அரிசி நீரில் போட்டு கொதிக்க வைக்கவும்.
அதன் பிறகு, பாத்திரத்தில் ஷாம்பு சேர்த்து கறிவேப்பிலை மற்றும் அரிசி தண்ணீர் கலக்கவும். பிறகு முடியைக் கழுவவும். இதைப் பயன்படுத்தினால் கண்டிஷனர் தேவைப்படாது.
அரிசி நீர் முடிக்கு மிகவும் நன்மை பயக்கும். இதனால் முடி பளபளப்பாக மாற்ற உதவும்.
மேலும், கறிவேப்பிலை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் முடி வேர்களை வலுப்படுத்துகிறது.