உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகமானால் அது நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து இன்னும் பல நோய்களுக்கு வழிவகுக்கின்றது.
நீரிழிவு நோயாளிகள் சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கலாம். அவற்றை பற்றி இங்கே காணலாம்.
வெந்தயத்தின் கசப்புத்தன்மை இரத்த சர்க்கரை அளவு, உடல் பருமன், கொலஸ்ட்ரால் என அனைத்தையும் கட்டுப்படுத்துகின்றது. சுகர் நோயாளிகள் தினமும் காலையில் வெந்தய நீர் குடுக்கலாம்.
பல வித ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ள இலவங்கப்பட்டை இரத்த சர்க்கரை அளவை குறைக்க பெரிய அளவில் உதவும். வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை நீர் குடிப்பதால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருப்பதோடு கொலஸ்ட்ராலும் குறையும்.
மிளகில் உள்ள பேபரின் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. ஒரு கிளாஸ் தண்ணீரில் 1/2 ஸ்பூன் மிளகு போடி சேர்த்து குடித்து வந்தால், சுகர் நோயை கட்டுக்குள் வைக்கலாம்.
மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் நீழிரிவு எதிர்ப்பு பண்புகளும் அதிகம் உள்ளன. தினமும் ஒரு கிளாஸ் பாலில் மஞ்சள் சேர்த்து குடிப்பது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.
சீரகம் கணைய ஆரோக்கியத்திற்கு நல்லது. தினமும் வெறும் வயிற்றில் சீரக நீர் குடிப்பதால், செரிமானம் சீராவதோடு இரத்த சர்க்கரை அளவும் கட்டுக்குள் இருக்கும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.