யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த உதவும் எளிய பானங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ள வெள்ளரி சாறு யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. குறிப்பாக வெயில் காலத்தில் இது மிக உதவியாக இருக்கும்
பல ஆரோக்கிய கூறுகள் கொண்ட, நீரேற்றம் மிகுந்த தர்பூசணி வெயில் காலத்திற்கு உகந்த பழமாக கருதப்படுகிறது. இது யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது
இஞ்சி டீ பல வித ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ள இஞ்சி டீ குடிப்பதால் யூரிக் அமிலத்தை எளிதாக சிறுநீரகத்தோடு சேர்த்து வெளியேற்ற முடியும்
மஞ்சளில் குர்குமின் என்ற கூறு உள்ளது. அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்ட இந்த கூறு யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்க உதவுகின்றது
வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பது யூரிக் அமிலத்தை எளிதாக உடலில் இருந்து வெளியேற்ற உதவும்
ஆப்பிள் பழத்தை போலவே ஆப்பிள் சைடர் வினிகரிலும் பலவித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைக்க தினம் ஒரு கிளாஸ் தண்ணீருடன் ப்ரு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை சேர்த்து உட்கொள்ளலாம்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.