செர்ரி பழங்களில் கிளைசெமிக் குறியீடு மிகவும் குறைவாகவும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகமாகவும் உள்ளதால் இவை இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவுகின்றன
பேரிக்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது வயிற்றுக்கு நிரம்பிய உணர்வை அளிப்பதுடன் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது
ஆரஞ்சு பழத்தின் கிளைசெமிக் குறியீடு மிகக் குறைவு. வைட்டமின் சி அதிகம் கொண்ட ஆரஞ்சு பழத்தில் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது
நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பழமாக கொய்யாப்பழம் பார்க்கப்படுகின்றது. வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ள இந்த பழத்தை உட்கொண்டால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்.
பல வித ஆரோக்கிய நன்மைகள் கொண்ட கிவியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. சர்க்கரை நோயாளிகள் இதை உட்கொள்ளலாம்
ஆன்டிஆக்சிடென்ட்கள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ள பெர்ரி சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்
ஆப்பிள் உட்கொள்வதால், நீரிழிவு நோய் கட்டுக்குள் இருப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், இடல் ஆரோக்கியமும் மேம்படும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.