யூரிக் அமில அளவு அதிகமானால், பல வித பிரச்சனைகள் ஏற்படும். யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்க உதவும் சில இயற்கையான வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
நாள் முழுவதும் அதிக தண்ணீர் குடிப்பது நல்லது. இதன் மூலம் சிறுநீரகம் விரைவாக கழிவுகளை உடலை விட்டு வெளியேற்றும்.
காய்கள், பழங்கள், முழு தானியங்கள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது யூரிக் அமில அளவை குறைக்க உதவும்.
செர்ரி பழங்களில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் யூரிக் அமில அளவை குறைத்து மூட்டு வலி பிரச்சனைகளுக்கும் நிவாரணம் அளிக்கின்றன.
சிட்ரஸ் பழங்கள், ஸ்ட்ராபெர்ரி, ப்ரோக்கோலி போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகள் யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.
மூலிகை தேநீர் யூரிக் அமில அளவை குறைத்து சிறுநீரக செயல்பாட்டையும் மேம்படுத்துகின்றது. இது நோய் எதிர்ப்பு சக்தியையும் வலுப்படுத்துகின்றது.
மதுபானம் யூரிக் அமில அளவை அதிகரிக்கும். ஆகையால் யூரிக் அமில நோயாளிகள் இதை தவிர்ப்பது நல்லது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.