உடனடியாக உடல் எடையை குறைக்க காலையில் சத்தான உணவை சாப்பிடுவது அவசியம்.
காலையில் சாப்பிடப்படும் உணவு வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் ஆற்றலை வழங்கும்.
அதே போல தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது. தினசரி 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.
பழங்கள், தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.
அதிகம் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிட கூடாது. இவை எடை இழப்பை கணிசமாக பாதிக்கும்.
சர்க்கரை உணவுகளில் அதிக கலோரிகள் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் உள்ளன.
தினசரி காலை அல்லது மாலை வேளையில் நடைப்பயிற்சி செய்வது அவசியமான ஒன்று.
உடல் எடை குறைய முக்கியமான ஒன்று போதுமான தூக்கம். சரியான தூக்கம் இல்லை என்றால் உடல் எடை குறையாது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)