உடல் எடையைக் குறைக்க, டயட்டில் இருந்து உடற்பயிற்சி வரை அனைத்து வகையிலும் அயராது முயற்சி செய்த பிறகும், சிலருக்கு உடல் எடை குறையாமல் இருக்கும்
உடல் பருமனை குறைக்கும் ஆற்றல் கொண்ட ஒரு பயனுள்ள வெயிட் லாஸ் பானம் குறித்து அறிந்து கொள்ளலாம்.
தென்னிந்திய சமையலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் இலவங்கப்பட்டை என்னும் மசாலா உடல் கொழுப்பை குறைக்க மிகவும் உதவியாக இருக்கும்.
இலவங்கப்பட்டையில் கால்சியம் மற்றும் நார்ச்சத்து மட்டுமின்றி வைட்டமின் ஏ, பி, சி மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன.
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் தன்மை கொண்ட இலவங்கபட்டை டீயை காலையிலும் மாலையிலும் அருந்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ஒரு கிளாஸ் தண்ணீரில் 6 கிராம் இலவங்கப்பட்டை தூள் சேர்த்து, மிதமான தீயில் கொதிக்க வைத்து அதை வடிகட்டி அதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து அருந்தவும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.