பெஸ்ட் ஏசி: 5 ஸ்டார் அல்லது 3 ஸ்டார் சிறந்த ஏசி எது?
நீங்களும் வெயிலுக்கு ஏசி வாங்க திட்டமிட்டிருக்கிறீர்கள் என்றால் அதற்கு முன் சில அடிப்படையான விஷயங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
ஏசியில் 3 ஸ்டார் சிறந்ததா? அல்லது 5 ஸ்டார் சிறந்ததா? என தெரிந்து கொண்டீர்கள் என்றால் எந்த தேவைக்கு எந்த ஏசி-யை வாங்கலாம் என்ற தெளிவு கிடைக்கும்.
உங்கள் அறையின் சதுர அடி அளவிற்கு ஏற்ற ஏசியின் திறனை தேர்ந்தெடுக்கவும். சிறிய அறைக்கு 1 டன், நடுத்தர அறைக்கு 1.5 டன், பெரிய அறைக்கு 2 டன் ஏசி பொருத்தமானது.
வீட்டிற்கு என்றால் அறையின் அளவை பொருத்து ஒரு டன் கூட போதும். அதுவே பிஸ்னஸ் செய்யக்கூடிய இடம் என்றால் ஒன்றரை டன் ஏசியை வாங்கலாம்.
இதற்கு அடுத்தபடியாக எல்லோருக்கும் எழும் பொதுவான கேள்வி என்னவென்றால் 3 ஸ்டார் ஏசி அல்லது 5 ஸ்டார் ஏசி, இரண்டில் எதை வாங்கலாம் என்பது தான்.
வீட்டிற்கு மற்றும் குறைவான உபயோகம் மட்டும் இருக்கும் இடங்கள் என்றால் 3 ஸ்டார் ஏசியை வாங்கலாம். கடைகள் மற்றும் 24 மணி நேரமும் உபயோகம் செய்யக்கூடிய இடங்களுக்கு 5 ஸ்டார் ஏசி சிறந்தது.
3 ஸ்டார் அதிக மின்சாரம் உபயோகிக்கும், 5 ஸ்டார் குறைவான மின்சாரம் உபயோகிக்கும் என்பது உண்மை என்றாலும் இரண்டுக்கும் முதலீடு அடிப்படையில் யோசித்தால் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது.
3 ஸ்டார் ஏசி 33 ஆயிரம் ரூபாய் என்றால் 5 ஸ்டார் ஏசி 43 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. இரண்டுக்கும் இடையே ஆண்டுக்கு செலவாகும் மின்சாரத்தை கணக்கிட்டால் வெறும் ஆயிரத்து 500 ரூபாய்க்குள் தான் வரும்.
அப்படி இருக்கும்போது வீட்டிற்கு 5 ஸ்டார் ஏசி வாங்கினால் உங்களுக்கான மின்சார சேமிப்பு தொகை பலன் கிடைக்க 5 ஆண்டுகள் கூட ஆகலாம்.
ஆனால் கடைக்கு 5 ஸ்டார் ஏசி வாங்கினால் இரண்டு ஆண்டுகளில் மின்சார சேமிப்பு தொகை பலன் கிடைக்கும். அந்தவகையில் வீட்டிற்கு 3 ஸ்டார் ஏசி சிறந்தது.