இயற்கைப் பொருட்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அதில் ஊட்டச்சத்துள்ள பீட்ரூட்டிற்கு முக்கிய இடம் உண்டு
காய்கறிகளில் மிகவும் சத்துள்ள சூப்பர்ஃபுட் காய் என்ற வரிசையில் முக்கியத்துவம் பெற்ற பீட்ரூட் உண்டால் உடலுக்கு ஆரோக்கியம், அழகுக்கு அழகு சேர்க்கும்
பீட்ரூட்டை சருமத்தில் தடவினால், தோலின் நிறம் மேம்படும், சருமம் ஆரோக்கியமாக இருக்கும். ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்திற்கு பீட்ரூட்டை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று தெரிந்துக் கொள்வோம்
மருந்தாக பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களில் சில சாலடாகவும், ஒப்பனைப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. அதில் பீட்ரூட் தான் முதலிடம் பெறுகிறது.
பருக்கள் மற்றும் முகப்பரு பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளித்து, எண்ணெய் சருமத்தை இயல்பானதாக மாற்றுகிறது
பீட்ரூட்டில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளதால், இது பாக்டீரியா மற்றும் தொற்றுநோயிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.
சருமத்தில் உள்ள இறந்த செல்களை சுத்தம் செய்ய பீட்ரூட் பேஸ்ட்டை தடவினால் அது சருமத்தை ஸ்க்ரப்பிங் செய்து, சருமத்தை மென்மையாக்குகிறது
இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை