இலவங்கப்பட்டை கல்லீரலில் என்சைம்களை உற்பத்தி செய்கிறது. மேலும் அழற்சியை குறைக்க செய்கிறது.
காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் கல்லீரல் நச்சு நீக்கி ஆரோக்கியமாக வைக்கவும் செய்யும்.
பப்பாளி கல்லீரலில் தேங்கியிருக்கும் கொழுப்பு பிரச்னையை சரிசெய்ய உதவும், இதனால் கல்லீரல்களில் கொழுப்புகள் நிற்காது.
மஞ்சள் செரிமானத்தை மேம்படுத்தி கல்லீரல்களில் தேங்கியிருக்கும் கொழுப்பை வெளியேற்ற உதவும்.
கிரீன் டீயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் கல்லீரல் வீக்கத்தைக் குறைக்கவும் உதவும்.
எடையைக் குறைக்க உதவும இந்த பூண்டு, கொழுப்பு கல்லீரல் மற்றும் கல்லீரல் நோய்களைக் குறைக்க உதவும்.
வால்நட்டில் அதிகப்படியான அளவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால், இவை கல்லீரல் கொழுப்பு மற்றும் கல்லீரல் தொற்றுக்களுக்கு எதிராகப் போராட உதவும்.