உடலில் யூரிக் அமிலம் அதிகமானால் பல வித ஆபத்துகளை ஏற்படுத்தும். நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் போல, யூரிக் அமில அளவையும் கட்டுக்குள் வைக்க வேண்டும்.
யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்கும் சில உலர் பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பிஸ்தாவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பியூரின் குறைவாக உள்ளது. பிஸ்தா நமது உடலில் அதிக யூரிக் அமில அளவைக் குறைக்க உதவுகிறது.
பேரிச்சம்பழத்தில் அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பேரீச்சம்பழத்தில் இரும்புச்சத்து, தாமிரம், வைட்டமின் பி6, புரதம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை உள்ளன. இவை வீக்கத்தைக் குறைக்கின்றன.
முந்திரியில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இதில் இயற்கையான யூரிக் அமிலத்தைக் குறைக்கும் பண்புகள் நிறைந்துள்ளன. இவற்றை உட்கொள்வதால் கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்து நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது.
செர்ரிகளில் உள்ள பண்புகள் அதிக யூரிக் அமிலத்தின் விளைவுகளை குறைக்கிறது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. நார்ச்சத்து அதிகம் உள்ள இவற்றை உட்கொள்வதால் செரிமானம் மேம்படும்.
பாதாமில் வைட்டமின் ஈ அதிகமாகவும், பியூரின் குறைவாகவும் உள்ளது. இவற்றை உட்கொள்வதன் மூலம் நமது உடலில் உள்ள யூரிக் அமிலம் கட்டுப்படும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ள பாதாம், ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி யூரிக் அமிலத்தைக் குறைக்கிறது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.