சிறந்த இயற்கை பானங்களுள் ஒன்று. உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் பிற நேர்மறையான மாற்றங்களை உருவாக்குகிறது
கொழுப்புச்சத்தே இல்லாத இளநீரில் வைட்டமின்கள் மற்றும் உணவு தாதுக்கள் அதிகம் உள்ளன. இளநீரைக் குடித்தால் உடலில் நீர்ச்சத்தும் சீராக இருக்கும்
சில நோயாளிகளுக்கு இளநீர் குடிக்கலாமா வேண்டாமா என்று சந்தேகம் இருக்கும். அதிலும் இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த கேள்வி வருவது இயல்பு. அதற்கான பதிலை தெரிந்துக் கொள்ளுங்கள்
உணவில் இருந்து போதுமான பொட்டாசியம் கிடைக்காதவர்களுக்கு இளநீர் வரப்பிரசாதம் ஆகும். இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பொட்டாசியம் அவசியமாகும்
உடலில் சேரும் அதிகப்படியான இரும்புச்சத்து மற்றும் சோடியத்தை வெளியேறும். இதனால் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்
இளநீர் குடிப்பதால், உடலில் உள்ள நீர் குறைபாடு நீங்கி, எலக்ட்ரோலைட் சமநிலை அடையும்
இளநீரில் உள்ள பொட்டாசியச்சத்து, உடலில் உள்ள சோடியத்தின் எதிர்மறையான விளைவுகளை எதிர்த்து போராடி, உடலின் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது
இரத்த அழுத்த அளவு குறையாமலும், உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமலும் பாதுகாக்கும் இளநீரை, இரத்த சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா என்ற சந்தேகமே தேவையில்லை, தாராளமாக குடிக்கலாம்
இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களுக்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது