உலக அளவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
நீரிழிவு நோய் என்பது நமது வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையுடன் தொடர்புடையது.
நீரிழிவு நோயை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது. எனினும் இதை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
இரத்து சக்கரை அளவு அதிகமாக உள்ள நோயாளிகள் தினமும் ஐந்து விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
உடல் செயல்பாடு மிக அவசியம். இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதோடு இரத்த அழுத்தம், மன அழுத்தம் ஆகியவையும் உங்களை அண்டாமல் இருக்கும்.
போதுமான அளவு தண்ணீர் குடிப்பது சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
போதுமான உறக்கம் இல்லாதவர்களுக்கு இரத்த சக்கரை அளவு கட்டுப்பாட்டை தாண்டி சென்றுவிடும். தினமும் கண்டிப்பாக 8 மணி நேரம் தூங்குவது அவசியமாகும்
வைட்டமின் டி யின் அளவு குறைவாக இருந்தால் இரத்த சர்க்கரை அளவு அதிகமாகும். ஆகையால் உணவில் வைட்டமின் டி போதுமான அளவு சேர்க்க வேண்டும்.
அவ்வப்போது சர்க்கரை அளவை பரிசோதித்து பார்த்துக் கொண்டிருப்பது நல்லது.