நமது உடலின் முக்கிய உடல் அமைப்பான எலும்பில், முக்கிய அங்கமாக உள்ள கால்சியம், பிறந்தது முதல் இறக்கும் வரை உடலின் வளர்ச்சிக்கு தேவைப்படுகிறது
எலும்புகளுக்கு வலு கொடுக்கும் முட்டைகோஸில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும். பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும்
எலும்பு பாதுகாப்பு உணவுகளின் பட்டியலில் கால்சியம் முதலிடத்தில் உள்ளது. சைவ உணவு உண்பவர்களுக்கான கால்சிய உணவுகள் இவை
கால்சியச் சத்து அதிகம் உள்ளது பால் என்பது அனைவருக்கும் தெரிந்தாலும், பாலைத் தவிர அதிக கால்சியம் உள்ள உணவுகளின் பட்டியலில் பாதாம் முதலிடத்தை பிடிக்கிறது
காய்கறிகளில், அதிலும் குறிப்பாக பச்சை இலை காய்கறிகளில் அதிக அளவு கால்சியம் உள்ளது. இவற்றில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம், பல வகைகளில் எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.
டோஃபு மற்றும் சோயா பீன்ஸ் இரண்டுமே கால்சியத்திற்கான நல்ல ஆதாரங்கள். சோயா பீனில் இருந்து தயாரிக்கப்படும் டோஃபு, சுவையாக இருக்கும்
எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் D மற்றும் கால்சியம் சத்துக்கள் முட்டையில் அதிகமாக இருக்கிறது. முட்டையை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால், உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும்
பச்சை நிற காய்கறியில் கால்சியம் நிறைந்துள்ளது. இருப்பினும், ப்ரோக்கோலியை உட்கொள்ளும் போது, அதை அளவிற்கு அதிகமாக சமைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும், ஏனென்னில் இது அதன் சத்துக்களை குறைக்கிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை